• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பத்த வச்சிட்டியே பரட்டை... அண்ணாச்சிக்கு எதிராக ஆட்டத்தை ஆரம்பித்த அபிஷேக்!

பத்த வச்சிட்டியே பரட்டை... அண்ணாச்சிக்கு எதிராக ஆட்டத்தை ஆரம்பித்த அபிஷேக்!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

எப்ப.. எப்ப என காத்துக் கொண்டிருந்த அபிக்கு வேலை கொடுப்பது போலவே இருக்கிறது இந்த டாஸ்க்.

  • Share this:
    பண்டிகை நாள் அதுவுமா பிக் பாஸ் வீட்டில் கொளுத்தி போடும் வேலையை அரங்கேற்றியுள்ளார் பிக் பாஸ்.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ்  சீசன் 5 நிகழ்ச்சி 11 நாட்களை கடந்து விட்டது.ஆனாலும் இதுவரை எந்தவித பரபரப்பும் சண்டையும் நிகழவில்லை. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். பிக் பாஸ் வீட்டில் முதன்முதலாக சண்டை போட்டு டி.ஆர்.பியை உயர்த்தியவர் நமீதா மாரிமுத்து தான். ஆனால் சண்டை போட்ட அடுத்த நாளே தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர்.

    இந்த வாரம் முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் நடைப்பெறவிருப்பதால், வீட்டை விட்டு யார் முதலில் வெளியேறுவார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.பண்டிகை நாள் அதுவுமா பிக் பாஸ் வீட்டில் கொளுத்தி போடும் வேலையை அரங்கேற்றியுள்ளார் பிக் பாஸ். இந்த வலையில் முதலில் சிக்கி இருப்பது சினிமா பையன் அபிஷேக் தான். இன்று வெளியான முதல் புரமோவில் அபிஷேக் ராஜா ,கூட்டத்தில் காணாமல் போனவங்க பட்டியலை சக ஹவுஸ்மேட்கள் சொல்ல வேண்டும் என  பிக் பாஸ் இட்ட கட்டளையை ஹவுஸ்மேட்களிடம் வாசித்துக் காட்டுகிறார்.

    எப்ப.. எப்ப என காத்துக் கொண்டிருந்த அபிக்கு வேலை கொடுப்பது போலவே இருக்கிறது இந்த டாஸ்க். உடனே பிரியங்கா பிக் பாஸ் கொளுத்திப் போட ஆரம்பித்துட்டார் தனக்கெ உரிதான பாணியில் கலாய்க்கிறார். உடனே வேலையை ஆரம்பித்த அபி, கூட்டத்தில் இருந்து காணாமல் போனவர்களின் பெயரை பட்டியலிட தொடங்குகிறார். அதாவது, இமான் அண்ணாச்சி பற்றியும் அவரின் நகைக்சுவை கூட்டத்தில் பிரிவை ஏற்படுத்தி இருப்பதாக அபி பேசிக் கொண்டிருக்கிறார்.



    இதை எல்லாம், இமான் அண்ணாச்சி ராஜூ மற்றும் தாமரை செல்வியுடன் சேர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில் பிக் பாஸ் ஆயுதபூஜை, விஜயதசமி அன்று  சிறப்பாக வெடியை கொளுத்தி போட்டுவிட்டார்.
    இன்றைய எபிசோடில் மேலும், யாரெல்லாம் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம்பெறுகின்றனர் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: