பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை அபிராமி வெங்கடச்சலம் தற்போது ஒரு தொழில்முனைவோராக மாறியிருக்கிறார்.
தனது சொந்த ஆடை பிராண்டை தொடங்கியுள்ள அபிராமி, அந்த விஷயத்தை இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். இது குறித்த வீடியோவைப் பகிர்ந்த அபிராமி, “எனது முதல் பேபி ஸ்டெப். என் பெயரில் ஒரு ஆடை பிராண்ட் வேண்டும் என்று என் வாழ்க்கையில் ஒருபோதும் நான் நினைத்ததில்லை... உங்கள் ஆதரவை தாருங்கள். நிறைய அன்பும் நன்றியும்” எனத் தெரிவித்துள்ளார்.
அபிராமியின் இந்த முயற்சியைப் பார்த்தவர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். தவிர அவர் பரத நாட்டியத்தில் பயிற்சி பெற்ற நடனக் கலைஞரும் கூட. அபிராமி தனது இன்ஸ்டாகிராமில் வித விதமான ஃபோட்டோஷூட் படங்களை பகிர்ந்துக் கொள்கிறார். தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அதோடு கடைசியாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சில்லுன்னு ஒரு காதல்’ சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் அபிராமி. திருமணக் காட்சியில் ஹீரோ சூர்ய குமார் ஐ.பி.எஸ்-ஸின் தோழியாக அவர் தோன்றியிருந்தார்,
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்