முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிம்புவை போன்று 'டாக்டர்' பட்டம் பெற்ற பிக் பாஸ் பிரபலம்!

சிம்புவை போன்று 'டாக்டர்' பட்டம் பெற்ற பிக் பாஸ் பிரபலம்!

அபிராமி

அபிராமி

பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதற்காக அபிராமிக்கு 'டாக்டர்' பட்டம் கிடைத்துள்ளது.

  • Last Updated :

பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருந்தாலும் மக்களின் ஆதரவை பெரும் நிகழ்ச்சிகள் தான் என்றென்றும் பல சாதனைகளை படைக்க கூடியதாக இருக்கும். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சில முக்கிய நிகழ்ச்சிகள் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்க கூடியவை.

இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் அடங்கும். பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள், என்ன விதமான மனநிலையை கொண்டுள்ளனர், சவால்களை எப்படி சமாளிக்கிறார்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளவே பலர் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 1 வெற்றிகரமாக சென்றதால், அடுத்தடுத்து பல சீசன்கள் வந்தன. தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த சீசன் இறுதி கட்டத்தை அடைந்துள்ள செய்தி நாம் எல்லோரும் அறிந்தது தான். ஆனால், பலரும் அறிந்திடாத செய்தி ஒன்று உள்ளது. இது வரை நடந்த பிக் பாஸ் சீசன்களில் ஒரு சில சீசன் அதிக வரவேற்பை பெற்றது. குறிப்பாக பிக் பாஸ் சீசன் 3 பல தரப்பு மக்களிடம் பெரிய அளவு வரவேற்பை பெற்றது.

இதற்கு முக்கிய காரணம் மூன்றாம் சீசனில் பல சண்டைகள், போட்டியாளர்களின் சிறப்பான விளையாட்டு முறை, காதல் காட்சி, நகைச்சுவை தருணங்கள் போன்ற பல அம்சங்கள் நிறைந்திருந்தது. அதே போன்று பிக் பாஸ் சீசன் 3 மூலம் தனக்கான ஒரு இடத்தை அதில் பங்கேற்ற போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சம்பாதித்தனர். மேலும் பலர் தனக்கான ரசிகர் பட்டாளத்தையும் பெற்றனர். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை அபிராமி.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவருக்கான அங்கீகாரம் பெருக தொடங்கியது. இவர் ஒரு நடிகை மட்டுமன்றி, பரத நாட்டிய கலைஞரும் ஆவார். இந்நிலையில் பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதற்காக அபிராமிக்கு 'டாக்டர்' பட்டம் கிடைத்துள்ளது. செயின்ட் மதர் தெரசா பல்கலை கழகத்தின் சார்பாக அபிராமிக்கு டாக்டர் பட்டம் தரப்பட்டுள்ளது.


ராஜா சாருக்கு இது தெரியாதா? இளையராஜாவை விமர்சிக்கும் சின்மயி

இதை மிகவும் மகிழ்ச்சி பொங்க அபிராமி தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக டாக்டர் பட்டத்தை கையில் கொண்டு தனது தாயுடன் ஒரு புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். இதை பலர் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த பதிவை பலர் லைக் செய்தும் வருகின்றனர். அபிராமி டாக்டர் பட்டம் பெற்றதை குறித்து நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். அபிராமியை போன்றே சமீபத்தில் நடிகர் சிம்பும் டாக்டர் பட்டம் பெற்று அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். இவர்களை போன்று மேலும் பல பிரபலங்கள் டாக்டர் பட்டம் பெறுவார்களா என்பதை காத்திருந்து பார்ப்போம்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Bigg Boss Tamil