ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அன்று பாலாவுடன் நடந்தது என்ன?... பிக் பாஸ் ரகசியத்தை உடைத்த அபிராமி!

அன்று பாலாவுடன் நடந்தது என்ன?... பிக் பாஸ் ரகசியத்தை உடைத்த அபிராமி!

பிக் பாஸ் அபிராமி

பிக் பாஸ் அபிராமி

அபிராமி, நிரூப்பை வெறுப்பேற்றும் விதமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலாவுடன் அதிக நெருக்கம் காட்ட ஆரம்பித்தார்

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  மாடலாக வலம் வந்த அபிராமி வெங்கடாசலம் ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வென்றதை அடுத்து சின்னத்திரை மற்றும் வெப் தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2017ம் ஆண்டு சன் டி.வி.யில் ஒளிபரப்பான ‘ஸ்டார் வார்ஸ்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 2018ம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மாடலிங், சினிமா, வெப் சீரிஸ் என பிசியாக வலம் வந்து கொண்டிருந்த அபிராமிக்கு ஜாக்பாட்டாக ‘பிக்பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

  பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபிராமிக்கு, அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அபிராமியின் கேரக்டர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது ‘துருவ நட்சத்திரம்’ என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். இதனிடையே சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியின் முதல் முயற்சியான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி பங்கேற்றார். விஜய் டி.வி.யின் ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் அபிராமி - பாலா இடையில் ஏதோ இருப்பதாக ரசிகர்கள் பேச ஆரம்பித்தனர்.

  இதையும் படிங்க.. ரங்கம்மா பாட்டியின் மறைவு… இயக்குனர் வ. கௌதமனின் கண்கலங்க வைக்கும் பதிவு!

  இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் ஹவுஸுக்குள் நிரூப்பின் முன்னாள் காதலியான அபிராமியின் இடுப்பை, அவர் கண்முன்னேயே பாலா கிள்ளியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதுபற்றி பாலாவும், வனிதாவும் கூட சீரியஸாக பேசிக்கொண்டனர். ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5 ல் அமீர், பாவனிக்கு முத்தம் கொடுத்த விவகாரம் பெரிய பிரச்சனையாக ஓடியது. இதற்கு முன்னதாகவும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிராமி முதலில் சக போட்டியாளரான கவினை காதலிப்பதாக கூறினார். ஆனால் கவின் சாக்ஷியை காதலித்ததால் முகென் ராவை காதலிக்க தொடங்கினார் அபிராமி. மலேசிய பாடகரான முகென் தனக்கு ஊரில் காதலி இருப்பதாக கூறியும் ஒரு தலையாக அவரை வெறித்தனமாக காதலித்தார்.

  இதையும் படிங்க.. ரங்கம்மா பாட்டியின் மறைவு… இயக்குனர் வ. கௌதமனின் கண்கலங்க வைக்கும் பதிவு!

  இந்நிலையில் தனது முன்னாள் காதலனான நிரூப்பை வெறுப்பேற்றும் விதமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலாவுடன் அதிக நெருக்கம் காட்ட ஆரம்பித்தார். இது ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை உருவாக்கியது. போதாக்குறைக்கு பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் ஸ்மோக்கிங் ரூமில் ஆண் போட்டியாளர்களுடன் தம் அடித்து அபிராமி சர்ச்சையில் சிக்கினார். இரண்டாவது முறையாக பாலாவும், அபிராமியும் ஸ்மோக்கிங் ரூமுக்குள் நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்டது.


  இந்நிலையில் தற்போது அபிராமி இன்ஸ்டாவில் நேரலையில் ரசிகர்களுடன் பேசி இருக்கிறார். அப்போது ஸ்மோக்கிங் ரூமில் பாலா உடன் என்ன நடந்தது? என ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள அபிராமி 'எதுவுமே நடக்கவில்லை' என விளக்கம் கொடுத்து இருக்கிறார். "எதுவும் நடக்கல. அது தான் உண்மை. ஒருவரை எனக்கு பிடித்திருக்கிறது என்றால் அதனை நான் தைரியமாக வெளியே சொல்வேன். மக்கள் 24 மணி நேரமும் பார்க்கும் ஷோவில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்” என பதிலளித்துள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv