முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அப்பாவே மீண்டும் வந்திருக்கிறார்... மகன் பிறந்தது குறித்து பிக் பாஸ் ஆரவ் உருக்கம்

அப்பாவே மீண்டும் வந்திருக்கிறார்... மகன் பிறந்தது குறித்து பிக் பாஸ் ஆரவ் உருக்கம்

பிக் பாஸ் ஆரவ்

பிக் பாஸ் ஆரவ்

ஆரவ்விற்கும், 'ஜோஷ்வா' படத்தில் நாயகியாக நடித்த ராஹேக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

  • 1-MIN READ
  • Last Updated :

பிக் பாஸ் ஆரவிற்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

திருச்சியை சேர்ந்த ஆரவ், படித்து முடித்த பிறகு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். சிறு வயது முதலே நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர், பார்த்த வேலையை விட்டுவிட்டு மாடலிங் துறையில் நுழைந்தார். பிறகு விஜய் டிவி-யின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, நடிகை ஓவியாவுக்கும் ஆரவிற்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது.

அப்போது அவர் ஓவியாவுக்கு மருத்துவ முத்தம் கொடுத்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. பின்னர் காதல் தோல்வியில் ஓவியா தற்கொலைக்கு முயன்றதாகவும் செய்தி வெளியானது. அதன் பிறகும் அவர்கள் இருவரும் தொடர்ந்து பழகினர். இதற்கிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கொரு காதலி இருப்பதாகவும் அவரைத்தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்றும் ஆரவ் கூறியிருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்திருந்தனர்.

2017-ம் ஆண்டு பிக் பாஸ் முதல் சீசனின் வெற்றியாளரான ஆரவ், அதற்கு முன்பாகவே 'ஓ காதல் கண்மணி' மற்றும் 'சைத்தான்' ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் மூலம் பிரபலமானதைத் தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். சரண் இயக்கத்தில் வெளியான 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ஆரவ், அதற்குப் பிறகு 'ராஜபீமா' படத்திலும் நடித்தார்.
 
View this post on Instagram

 

A post shared by Arav (@actorarav)இதனிடையே ஆரவ்விற்கும், 'ஜோஷ்வா' படத்தில் நாயகியாக நடித்த ராஹேக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இருவருமே பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கர்ப்பமான ராஹேக்கு கடந்த செப்டம்பர் மாதம் வளைகாப்பு நடைப்பெற்றது. இந்நிலையில் இன்று காலை ஆரவ் - ராஹே தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள ஆரவிற்கு, பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg boss Aarav