
பிக் பாஸ் பிரபலங்கள்
தற்போது பிக் பாஸ் ஆஜித்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.

பிக் பாஸ் பிரபலங்கள்

விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த ஜனவரி 17-ம் தேதி முடிவடைந்தது.

இதன் டைட்டில் வின்னராக நடிகர் ஆரியும், ரன்னராக பாலாஜி முருகதாஸும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பிக் பாஸ் இறுதிப் போட்டிக்கு முன்பே அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் சந்தித்தனர்.

பின்னர் ஆர்.பி.செளத்ரி தயாரித்த ‘கலத்தில் சந்திப்போம்’ படத்தின் ப்ரிவியூ ஷோ-வில் பிக் பாஸ் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

இதையடுத்து தனது செல்லப் பிராணியின் முதல் பிறந்தநாளை கொண்டாடினார் ஷிவானி.

அதில் ஆஜித், சம்யுக்தா, பாலாஜி முருகதாஸ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

பின்னர் அர்ச்சனாவின் தங்கை அனிதாவுக்கு வளைகாப்பு நடந்தது.

அந்த விழாவிலும் பிக் பாஸ் பிரபலங்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

இதையடுத்து சோம் சேகரின் பிறந்தநாள் பார்ட்டியில் பிக் பாஸ் பிரபலங்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

பின்னர் சமீபத்தில் ரியோவின் மகளுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

அதில் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் ஆஜித்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.

இதில் சம்யுக்தா, சோம் சேகர், கேப்ரியலா , ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்ச்சியாகக் கொண்டாடியிருக்கிறார்கள்.

பாடல் பாடிய ஆஜித்.

ரேகாவுடன் ஆஜித்
Published by:Shalini C
First published: