ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அமுதவாணனுக்கு இவ்ளோ கோபம் வருமா? ஷாக்கான ரசிகர்கள்!

அமுதவாணனுக்கு இவ்ளோ கோபம் வருமா? ஷாக்கான ரசிகர்கள்!

பிக் பாஸ் அமுதவாணன்

பிக் பாஸ் அமுதவாணன்

பிக் பாஸில் அசீம் பேசுவதை எதிர்த்து குரல் கொடுக்கிறார். ரசிகர்கள் இதை வரவேற்றுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிக் பாஸ் இன்றைய எபிசோடில் அமுதவாணின் கோபத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். அசீமுக்கு எதிராக குரல் கொடுத்து பொங்கி வெடிக்கிறார் அமுதவாணன்.

  பிக் பாஸ் சீசன் 6 ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது. 20 போட்டியாளர்களும் தங்களின் தனித்துவத்தை வெளியில் காட்ட தொடங்கி விட்டனர். இதுவரை அப்பாவி முகத்துடன் வீட்டை சுற்றி வந்தவர்களும் இன்று நிஜ முகத்தை காட்ட வீட்டில் களேபரம் நடக்கிறது. வீட்டில் முதன்முதலில் சண்டைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் தனலட்சுமி தான். அவருக்கும் ஜிபி முத்துவுக்கு சண்டை வெடித்தது. அப்போது ரசிகர்கள் ஜிபி முத்து பக்கம் நின்றனர். ஆனால் அதன் பின்பு அசல் மற்றும் அசீம்முடன் தனலட்சுமி மோத ரசிகர்கள் தனலட்சுமி பக்கம் நிற்கின்றனர்.

  ஜிபி முத்து முகத்துல அப்படியொரு சந்தோஷம்.. மனைவி, குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடினார்!

  இப்போது அமுதவாணனும் தனலட்சுமி பக்கம் நின்று அசீம்மை எதிர்த்து பேசுகிறார். இவ்வளவு நாளாக வீட்டில் இருப்பவர்களுக்கு சரி ரசிகர்களுக்கும் சரி அமுதவாணன் பயங்கர ஸ்வீட். காமெடி செய்து மக்களை சிரிக்க வைப்பார் என்ற  பார்வை தான் இருந்தது. ஆனால் இப்போது கதையே வேற. அசீம் பேசுவதை எதிர்த்து குரல் கொடுக்கிறார். நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்கில் செரினாவிடம் இருக்கும் பொம்மையை அமுதன் பறிக்க, இந்த பக்கம் விக்ரமனும் களத்தில் இறங்கி அசலிடம் இருக்கும் பொம்மையை பிடுங்குகிறார்.

  ' isDesktop="true" id="825807" youtubeid="bun9KaP3Ax8" category="television">

  இதை ஷிரினும் தனலட்சுமி வரவேற்று கத்த, அசீமுக்கு கோபம் வருகிறது. உடனே அவர் அமுதவாணனிடம் செல்ல,  பதிலுக்கு அமுதவாணனும் ”இந்த பொண்ணை போடி , அவ, இவன்னு பேசுற இதெல்லாம் தப்பு இல்லையா. உன் டயலாக்கெல்லாம் சீரியலோட வச்சிக்கோ”  என்று வார்னிங் கொடுக்கிறார். இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள் அமுதவாணனுக்கு இவ்வளவு கோபம் வருமா? என ஆச்சரியத்துடன் கேட்கின்றனர். அதே சமயம் அசீமுக்கு எதிராக குரல் கொடுத்ததை வரவேற்றுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay tv