ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரீல்ஸ்னு சொன்னது தப்பு... ஜனனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விக்ரமன், தனலட்சுமி - வெளியானது வீடியோ!

ரீல்ஸ்னு சொன்னது தப்பு... ஜனனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விக்ரமன், தனலட்சுமி - வெளியானது வீடியோ!

பிக்பாஸ்

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் விக்ரமனிடன் தனலட்சுமி ஸ்வாப்பின் போது ஜனனி ஏன் ரீல்ஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தினார் என்று கூற அதற்கு விக்ரமன் ரீல்ஸ் என்ற வார்த்தைய பயன்படுத்தியது தவறு என்று ஜனனியிடம் கூறினார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 5-வது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவை நிக்ழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாள் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 4 கிளப்புகளாக பிரிந்து வீட்டில் உள்ள வேலைகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில், வெஷல் கிளீனிங் டீம் லீடர் ஜனனி ஸ்வாப் வரும் போது தனலட்சுமியிடம் இது வீடு மாதிரி அவர் அவர் வயதுக்கு ஏத்தமாதிரிதான் ஆட்களை தேர்வு செய்திருக்கிறார்கள், ஒரே வயதுடையவர்களை எடுப்பதற்கு இது ரீல்ஸ் கிடையாது என்று கூறினார்.

Also read... Suriya 42: சூர்யா - சிறுத்தை சிவா படத்தில் இணையும் கே.எஸ்.ரவிக்குமார்!

இந்நிலையில் நள்ளிரவு விக்ரமனிடன் தனலட்சுமி ஸ்வாப்பின் போது ஜனனி ஏன் ரீல்ஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தினார் என்று கூற அதற்கு விக்ரமன் ரீல்ஸ் என்ற வார்த்தைய பயன்படுத்தியது தவறு என்று ஜனனியிடம் கூறினார். இதற்கு ஜனனி கிட்சனில் இன்று விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

அதே சமயம் வெளியில் ஸ்விம்மிங்பூல் அருகே படுத்துக்கொண்டிருக்கும் ஜிபி முத்து மல்லாக்க படுத்துக்கிட்டு விட்டத்த பாக்குறதுல என்ன சுகம்னு வடிவேலு சார் சொன்னது கரெக்டா இருக்குனு பேசிக்கொண்டிருக்கிறார். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bigg Boss Tamil 6