ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸுக்கு மைனா போறது கன்பார்ம்.. ஆனா சின்ன ட்விஸ்ட் - நந்தினி எண்ட்ரியில் சிறு மாற்றம்!?

பிக்பாஸுக்கு மைனா போறது கன்பார்ம்.. ஆனா சின்ன ட்விஸ்ட் - நந்தினி எண்ட்ரியில் சிறு மாற்றம்!?

மைனா நந்தினி

மைனா நந்தினி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் கண்டு ரசிக்கலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் மைனா நந்தினி பங்கேற்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. அவரது என்ட்ரி குறித்த தகவல், முதல்நாள் நிகழ்ச்சியில் தெரியவரும் என்று லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.

  டிவி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6-ஆவது சீசன் இன்று மாலை தொடங்குகிறது. கடந்த சீசன்களை போலவே இந்த சீசனிலும் போட்டியாளர்கள் மிகவும் கவனமாக ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  அதிகாரப்பூர்வமான போட்டியாளர்கள் பட்டியல் தொலைக்காட்சியில் மட்டுமே தெரியவரும். இருப்பினும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த உறுதி செய்யப்பட்ட தகவல்கள், கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

  அந்த வகையில் பிரபல யூட்யூப் நாயகன் ஜி.பி. முத்து, சின்னத்திரை நடிகர் அசிம், நடிகை ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர், இலங்கையைச் சேர்ந்த டிவி தொகுப்பாளினி ஜனனி, காமெடி நடிகர் அமுதவாணன் உள்ளிட்டோர் இந்த சீசனில் பங்கேற்க உள்ளனர்.

  வெகுளிதானே உண்மை.. பிக்பாஸில் ஜெயிப்பாரு ஜிபி முத்து - சோஷியல் மீடியாவில் உருவான ஆர்மி!

  இதற்கிடையே இந்த சீசனில் பங்கேற்பார் என்று பரவலாக பேசப்பட்ட மைனா நந்தினி, பிக் பாஸ் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதனால் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

  இந்நிலையில் மைனா நந்தினி பிக் பாஸ் சீசன் 6-இல் பங்கேற்பது கன்ஃபார்ம் என்று தகவல்கள் லேட்டஸ்டாக வெளிவந்துள்ளன. அதாவது சர்ப்ரைஸ் என்ட்ரியாக மைனா நந்தினி பிக்பாஸ் வீட்டிற்கு செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  கடந்த பிக்பாஸில் கொஞ்சத்தில் மிஸ்.! இந்தமுறை தட்டித் தூக்குவாறா அஸிம்?

  இதுதொடர்பான அடுத்த அப்டேட், பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாள்  முடிவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6  நிகழ்ச்சியை, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் கண்டு ரசிக்கலாம்.

  Published by:Musthak
  First published:

  Tags: Bigg Boss Tamil 6