ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸில் ஒரே விஷயத்திற்காக தேம்பி தேம்பி அழுத அசீம் - ஜனனி!

பிக் பாஸில் ஒரே விஷயத்திற்காக தேம்பி தேம்பி அழுத அசீம் - ஜனனி!

பிக் பாஸ் 6

பிக் பாஸ் 6

பிக் பாஸ் இன்றைய எபிசோடின் புரமோ தற்போது வெளியாகியுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பிக் பாஸ் இன்றைய புரமோவில் ஒருபக்கம் அசீமும் , ஜனனியும் தேம்பி தேம்பி அழுகின்றனர். இருவரையும் சக போட்டியாளர்கள் சமாதானம் செய்கின்றனர்.

    பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி 9 நாட்கள் ஆகிவிட்டன. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸில் இப்போது 21 போட்டியாளர்கள் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் மைனா நந்தினி வந்து சேர்ந்தார். இந்த வாரம் வீட்டின் தலைவர் ஜிபி முத்து. இதற்காக நடந்த போட்டியில் ஜனனியும் ஜிபி முத்துவும் கடைசி வரை நின்று விளையாடினர். இறுதியில் ஜிபி முத்து வீட்டின் தலைவரானார். இந்நிலையில் இன்றைய எபிசோடின் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கதை சொல்லும் டாஸ்க் போட்டியாளர்களுக்கு இந்த வார வீக்லி டாஸ்க்காக அறிவிக்கப்படுகிறது.

    பிக் பாஸில் என்ன நடக்கிறது? அசல் கோளாறு செய்த விஷயத்தால் வெடித்தது சர்ச்சை!

    அதாவது ஒவ்வொரு போட்டியாளர்களும் கதை சொல்ல வேண்டும். அவர்களின் கதை ஆர்வமாக இருந்தால் அல்லது அதை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என  போட்டியாளர்கள் நினைத்தால் அமைதியாக இருக்கலாம். விருப்பமில்லை என்றால் ரெட் பட்டனை அழுத்த வேண்டும். 3 ரெட் லைட் எரிந்தால் அந்த போட்டியாளர் வெளியேற்றப்படுவார். யார் முழுமையாக இந்த டாஸ்கில் கதை சொல்லி முடிக்கிறாரோ அவரே வெற்றியாளர் என பிக் பாஸ் ரூல்ஸ் விளக்கப்படுகிறது.

    அசீம் கதை சொல்ல தொடங்குகிறார். கல்யாணம், டைவர்ஸ், மகன் பற்றி பேசுகிறார். இடையில் மகாலட்சுமி, சாந்தி, மகேஸ்வரி ஆகியோர் ரெட் லைட் பட்டனை அழுத்த அவர் தனது கதையை சொல்லி முடிக்காமல் வெளியேறுகிறார். வெளியே வந்த அசீம் கண்ணீரில் மூழ்கி அழுகிறார்.

    அதே போல தான் ஜனனி கதையும். அவரும் நான் தான் என் குடும்பத்திற்காக உழைக்கிறேன் என கதை சொல்ல, விக்ரமன், தனலட்சுமி, ஆயிஷா ஆகியோர் ரெட் லைட் பட்டனை அழுத்த அவரும் டாஸ்க்கை முடிக்க முடியாமல் வெளியேறுகிறார். வெளியே வந்த ஜனனி தேம்பி தேம்பி அழு, அவரை ரச்சிதா சமாதானம் செய்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay tv