Home /News /entertainment /

bigg boss 6 : பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்களும் போட்டியாளர் ஆகலாம்.. செம்ம சான்ஸ்!

bigg boss 6 : பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்களும் போட்டியாளர் ஆகலாம்.. செம்ம சான்ஸ்!

பிக் பாஸ் 6

பிக் பாஸ் 6

Bigg Boss Tamil Season 6 : ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு சர்ப்ரைஸ் பிக் பாஸ் சீசன் 6ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக மக்கள் போட்டியாளராக பங்கேற்க ஒரு அரிய வாய்ப்பு. மிஸ் பண்ணிடாதீங்க.

    விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், விரைவில் 6-வது சீசன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டன. அதே போல் இந்த சீசனையும் வழக்கம்போல் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மீண்டும் பழைய இடத்திற்கு சென்ற பிக் பாஸ் அர்ச்சனா!

    இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் வருவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வழக்கம் போல் தகவல்கள் அடிப்படையில் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்களில் பெயர்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு சர்ப்ரைஸ் பிக் பாஸ் சீசன் 6ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெறும் பிரபலங்கள் மட்டுமில்லை  சாமானிய மக்கள் கூட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.



    இதற்கான அரிய வாய்ப்பை வழங்குகிறது விஜய் டிவி. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் புரமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுக் குறித்த புரமோவில் பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜூ ஜெயமோகன் என்ட்ரி கொடுத்து வழக்கம் போல் அதகளம் செய்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க விரும்புபவர்கள் Vijay.star.com ல் லாகின் செய்து பிக்பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை வீடியோவாக பதிவு செய்து அப்லோடு செய்ய வேண்டும்.

    இன்னும் 2 மாதத்தில் சீரியலில் நடிக்க வரும் ஆல்யா.. எந்த சேனலில் தெரியுமா?

    அப்படி செய்தவர்களின் விண்ணப்பங்கள் பிக் பாஸ் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் என தெரிகிறது. பிக் பாஸ் மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ள ஜூலி,  தாமரை செல்வி ஆகியோரும் இன்று இந்த உயரத்தை அடைந்திருப்பதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தான் முக்கிய  காரணம். நீங்களும் இந்த வாய்ப்பை மிஸ் செய்யாதீர்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Vijay tv

    அடுத்த செய்தி