பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார்? ரன்னர்அப் யார்? என்ற விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. பிக் பாஸ் 5 ஃபினாலே நிகழ்ச்சி நேற்றே முடிவடைந்தது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்ததால் நிகழ்ச்சி டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்பே வெற்றியாளர் யார்? என்ற தகவலும் இணையத்தில் கசிந்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான ஃபினாலே நேற்றுடன் முடிந்தது. இதன் ஒளிப்பரப்பு இன்று மாலை விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ளது. எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனல்ஸ் லைவ்வாக நடக்கும். விஜய் டிவியில் அதை லைவ் டெலிகாஸ்ட் செய்வார்கள். ஆனால் இந்த முறை கொரோனா தொற்று காரணமாக ஃபனல்ஸ் லைவ்வாக நடக்கவில்லை. மாறாக எப்போதுமே சனி, ஞாயிறு நிகழ்ச்சி சனிக்கிழமை எடுக்கப்படுவது போல் நேற்று காலை முதல் தொடங்கி பிக் பாஸ் 5 இறுதி நிகழ்ச்சி ஷூட்டிங் எடுக்கப்பட்டது. நேற்று ஷூட்டிங் முடிந்த உடனே சில மணி நேரத்தில் வின்னர் யார்? ரன்னர் அப் யார்? யாரெல்லாம் வந்தார்கள்? போன்ற தகவல்கள் இணையத்தில் கசிய தொடங்கின.
இதையும் படிங்க.. பிக் பாஸ் 5 வீட்டில் நிஜ ஜோடி? வைரலாகும் புரமோவால் ரசிகர்களுக்கு வந்த சந்தேகம்!
அதே நேரம்,
பிக் பாஸ் 5 ஃபைனல்ஸில் எடுத்த சில புகைப்படங்களும் இணையத்தில் லீக் ஆகி சுவாரசியத்தை கூட்டின. அதன் படி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ராஜூ என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லை, ராஜூ பிக் பாஸ் வின்னர் ட்ரோபியுடன் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் கசிந்தது. இதனால் ராஜூவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே போல் இரண்டாவது இடம் விஜய் டிவி ஆங்கர் பிரியங்காவுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராஜூ டைட்டில் வின்னர் ஆகிய பின்பு, பிரியங்கா தான் உற்சாகத்தில் அவரை கட்டிப்பிடித்து அழுது வாழ்த்துக்கள் கூறியதாகவும் ஒருபக்கம் யூடியூப் சேனல்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றன.
50 லட்சம் பரிசுடன்
ராஜூ ஹாப்பியாக வீட்டுக்கு சென்று இருக்கிறார்.மூன்றாவது இடம் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த பாவ்னிக்கு வழங்கப்பட்டுள்ளது. டான்ஸ் மாஸ்டர் அமீருக்கு 4 ஆவது இடம் எனவும் தகவல்கள் ஒருபக்கம் கசிந்த வண்ணம் உள்ளன. இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் முந்தைய சீசன் போட்டியாளர்கள், 5ல் கலந்து கொண்ட போட்டியாளர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என பலரும் வந்ததாக தெரிகிறது. அதே போல், நிரூப், ராஜூவின் அம்மா, தாமரை, ஐக்கி பெர்ரியுடன் எடுத்திக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் கசிந்துள்ளது.
மொத்தத்தில் 106 நாட்கள் நடைப்பெற்ற பிரம்மாண்ட பிக் பாஸ் 5 நிகழ்ச்சி நேற்றுடன் இனிதே நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் நடைப்பெற்ற அனைத்து நிகழ்வுகளையும் இன்று மாலை ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5 ஃபினாலே தொகுப்பில் பார்க்கலாம். வெளியான தகவல்கள் அனைத்தும் உண்மையா? என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.