• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss 5 : பாவனியை அடிக்க கை நீட்டும் தாமரை... பாத்ரூமில் வெடிக்கும் பஞ்சாயத்து!

Bigg Boss 5 : பாவனியை அடிக்க கை நீட்டும் தாமரை... பாத்ரூமில் வெடிக்கும் பஞ்சாயத்து!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

இந்த டாஸ்கில் யார் வெற்றி பெறுவார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக நான்கு வாரங்களை கடந்து கோலகமாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கிறது.

    இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், தற்போது 14 பேர் போட்டியில் உள்ளனர். இவர்களில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அபினய், இசைவாணி, சுருதி, பாவ்னி, சிபி, அக்ஷரா, ஐக்கி மற்றும் நிரூப் ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார் இந்த வாரம் எலிமினேஷன் ஆகப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

    இதனிடையே நேற்று தீபாவளியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைக் காட்டி, குடும்பத்தினரை நினைவூட்டியுள்ளது. மேலும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வீட்டில் இருந்து ஒரு கடிதம் மற்றும் விரும்பிய உணவும் வரவழைக்கப்பட்டு கொடுக்கப்பட்டது. இறுதியில் பிக் பாஸ், போட்டியாளர்கள் அனைவருக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும், பிக் பாஸ் ரசிகர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் கூறினர்.

    இந்த நிலையில் இன்று வழக்கம் போல டாஸ்குகள் தொடங்கப்படுகிறது. அடுத்த வார தலைவர் டாஸ்குக்கான போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் வழங்கப்படுகிறது. ‘செண்பகமே செண்பகமே’ என்ற டாஸ்கில் போட்டியாளர்கள் ப்ளூ மற்றும் ஆரஞ்சு உடை அணிந்து இரு அணிகளாக பிரிந்து பால் கறக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதற்காக அவர்களுக்கு காலி தண்ணீர் பாட்டில்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஹவுஸ்மேட்ஸ் அடித்து புடித்துக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் பால் கறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டு அணியினரும் சண்டை போடும் காட்சிகள் இரண்டாவது ப்ரோமோவில் இருந்தது.

    இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், தாமரை மற்றும் பாவ்னி இடையே சண்டை நடைபெறுகிறது. இருவரும் வெவ்வேறு அணியில் இருக்கின்றனர், அதில் பொய் பேசாதே, எனக்கு பிடிக்காது என தாமரை கூறுகிறார். அதற்கு பாவ்னியும் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் உள்ளது. கடந்த வாரம் தான் தாமரை - பாவ்னி இடையே இருந்த பிரச்சனையை கமல் தீர்த்து வைத்த நிலையில் மீண்டும் பிரச்னை வருவது தெரிகிறது. இந்த டாஸ்கில் ஒருவருக்கொருவர் முட்டி, மோதிக்கொள்வதால் பால் கீழே சிந்திவிடுவதும் தெரிகிறது. மேலும் டாஸ்க்கிற்காக கொடுக்கப்பட்டிருக்கும் மாடு பொம்மையும் உடைந்து கீழே விழுந்து கிடக்கிறது.



    அதனருகே செய்வதறியாமல் இமான் அண்ணாச்சி நின்று கொண்டிருக்கிறார். சிபி கோபமாக அனைத்தையும் தூக்கி எரிகிறார். இதனால் இரு அணியினருக்கும் இடையே பிரச்னை ஏற்படுவது தெரிகிறது. இந்த டாஸ்கில் யார் வெற்றி பெறுவார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கும் நபரை சக போட்டியாளர்கள் யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பதால் இந்த டாஸ்க் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: