• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எங்கே இருக்கிறார் பிக் பாஸ் நமீதா மாரிமுத்து? ரசிகர்களின் கேள்விக்கு கிடைத்தது பதில்!

எங்கே இருக்கிறார் பிக் பாஸ் நமீதா மாரிமுத்து? ரசிகர்களின் கேள்விக்கு கிடைத்தது பதில்!

பிக் பாஸ் நமீதா

பிக் பாஸ் நமீதா

வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நமீதா மாரிமுத்து மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படலாம் எனவும் கூறினார்.

  • Share this:
    பிக்பாஸ் சீசன் 5ல் இருந்து வெளியேறிய திருநங்கை நமீதா மாரிமுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது தங்கை வைஷூ தெரிவித்துள்ளார்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 மிகப் பிரம்மாண்டமாக கடந்த வாரத்தில் தொடங்கியது. பிரபல தொகுப்பாளினி பிரியங்கா, நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு, இமான் அண்ணாச்சி, சினிமா பையன் யூடியூப் சேனலை நடத்தி வரும் அபிஷேக் உள்ளிட்ட 18 பிரபலங்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர். முதன் முறையாக திருநங்கையான நமீதா மாரிமுத்துவும், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் அவரின் வருகை சமூக வலைதளங்களிலும் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.

    வழக்கம்போல், இந்த சீசன் பிக்பாஸூம் சாந்தமாகவே ஆரம்பித்தது. நிகழ்ச்சியின் நடுவே பிரச்சனைகளும், சர்சைகள் எழுவது வாடிக்கையாக இருந்து வருகிறது என்றாலும், இந்த சீசனில் முதல் வாரம் முடிவதற்குள்ளாகவே பிக்பாஸில் சர்ச்சை வெடித்துள்ளது. அதுவும் பலராலும் உற்றுநோக்கப்பட்ட, கடுமையான போட்டியாளராக இருப்பார் என கருத்தப்பட்ட நமீதா மாரிமுத்துவால் எழுந்த இந்த சர்ச்சை, இன்னும் கவனத்தை ஈர்த்துள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவரான தாமரைச் செல்வி, நமீதாவைப் பார்த்து கூறிய கருத்து அவருக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது.

    இதற்காக, தாமரைச் செல்வி, நமீதாவிடம் மன்னிப்புக் கேட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் அவர் இல்லை எனக் கூறப்படுகிறது. மன உளைச்சலுக்குள்ளான நமீதா, வீட்டிற்குள் கடுமையாக நடந்து கொண்டதாகவும், இதனால் ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் முதலில் தகவல்கள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த வார இறுதியில் கமல் பங்கேற்ற நிகழ்ச்சியிலும் நமீதா மாரிமுத்து இல்லை. இதனால், அவர் வீட்டில் இருந்து வெளியேறியது உறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில், அங்கு என்ன நடந்தது? நமீதா மாரிமுத்து எப்படி இருக்கிறார் என்பது குறித்து அவரின் திருநங்கை தங்கையான வைஷூ இப்போது விளக்கம் அளித்திருக்கிறார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள வைஷூ, நமீதா மாரிமுத்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். மிகுந்த மன உளைச்சலில் அவர் இருப்பதாகவும், விரைவில் சிகிச்சைப் பெற்று இயல்பு நிலைக்கு திரும்புவார் எனத் தெரிவித்துள்ளார். மேலும், தாமரைச் செல்வி, நமீதா மாரிமுத்துவைப் பார்த்து கூறிய கருத்துக்கள் ஏற்புடையதல்ல என தெரிவித்த வைஷூ, வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நமீதா மாரிமுத்து மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படலாம் எனவும் கூறினார்.

    மளிகை கடையில் வேலை.. பனகல் பார்க்கில் தூக்கம்! இமானுவேல் இமான் அண்ணாச்சியானது இப்படி தான்!

    நமீதா மாரிமுத்து, தான் சந்தித்த கஷ்டங்களை பிக்பாஸ் வீட்டில் எடுத்துக்கூறியது, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அவருக்கென ரசிகர்கள் பட்டாளமும் திரண்ட நிலையில் திடீரென வீட்டில் இருந்து அவர் வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. விஜய் டிவியும், பிக்பாஸ் குழுவும் இது குறித்து எந்தவிளக்கமும் கொடுக்கவில்லை. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசமும் நமீதா மாரிமுத்து வெளியேற்றம் குறித்து எதுவும் பேசவில்லை. இதனால் குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு, நமீதா மாரிமுத்துவின் தங்கை அளித்திருக்கும் பேட்டி சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதமாக அமைந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: