• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • Bigg Boss 5 : அட்டூழியம் பண்ணாத... ரொம்ப தப்பா தெரியுது! தாமரைக்கு எதிராக ராஜூ?

Bigg Boss 5 : அட்டூழியம் பண்ணாத... ரொம்ப தப்பா தெரியுது! தாமரைக்கு எதிராக ராஜூ?

பிக் பாஸ் 5 ராஜூ

பிக் பாஸ் 5 ராஜூ

தாமரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்து மிகவும் வெகுளியாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக சற்று வித்தியாசமாக பேசுகிறார்.

 • Share this:
  பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை நமீதா மாரிமுத்து, நாடியா, அபிஷேக் வெளியேற்றப்பட்டுள்ளதால் தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளனர்.

  இந்த நிகழ்ச்சியில் டாஸ்க் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வாரத்திற்கான லக்ஸூரி டாஸ்க்காக, நகரம் vs கிராமம் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. 'ஊரு விட்டு ஊரு வந்து' என்கிற டாஸ்க்கிற்கு ஏற்ற வகையில் கார்டன் ஏரியாவில் செட்டப்கள் போடப்பட்டுள்ளன. நகரத்திற்கு தலைவர் நிரூப், கிராமத்திற்கு தலைவர் அக்ஷரா என பிக் பாஸ் அறிவித்தார். மேலும் பாவ்னி, ஸ்ருதி, இமான் அண்ணாச்சி, பிரியங்கா, இசைவாணி, சிபி, வருண் ஆகியோர் நகரத்தினர் அணியாகவும், சின்னப்பொண்ணு, தாமரை, மது, ஐக்கி, ராஜு, அபினய் ஆகியோர் கிராமத்து அணியாகவும் பிரிந்தனர். அனைவரும் தங்களது கதாபாத்திரத்திற்கு ஒன்றியவாறு டாஸ்கில் ஈடுபட்டுள்ளனர்.

  கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த டாஸ்கில், பல்வேறு விளையாட்டுகள் கொடுக்கப்பட்டு பிக் பாஸ் பணமும் பரிசு தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே கிராமம் மற்றும் நகரத்தினர் இடையே நேற்று பட்டிமன்றம் நடந்தது. இதில் நடுவராக இசைவாணி இருந்தார். பட்டிமன்றம் தொடங்கிய நிலையில், ஐக்கி பெர்ரி பிரியங்கா சக போட்டியாளர்களை ஆண், பெண் வித்தியாசம் இன்றி கட்டிப்பிடிப்பதாகவும், இது பார்க்கும் மக்களுக்கு தவறாக தெரியலாம் என பேசினார். இதற்கு பதில் அளித்த பிரியங்கா, கட்டிபிடி வைத்தியத்தை சொல்லி கொடுத்தவரே கமல்ஹாசன் தான் என்றார். மேலும் இந்த வீட்டில் எவ்வித தவறான நோக்கம் இன்றி தனது கட்டிப்பிடி வைத்தியம் தொடரும் என அழுத்தமாக தனது கருத்தை தெரிவித்தார்.

  இதனை தொடர்ந்து பூர்வீகத்தை மறந்தவர்கள் என பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து பேச வேண்டும் என தலைப்பு கொடுக்கப்படுகிறது. அப்போது பேசிய தாமரை நகரத்து அணியில் இருக்கும் சுருதியை பார்த்து அவர் அணிந்திருக்கும் உடை தனக்கு பிடிக்கவில்லை, கிராமத்தில் இருந்து வந்த பெண் மாடர்ன் உடையில் இருக்கிறார், பெண்கள் அடக்கமாக இருக்க வேண்டும் என கூறினார். இதற்கு நகரத்தினர் அணி தரப்பில் பதில் கொடுத்த, சிபி ஆடை குறித்த விமர்சனம் செய்வது தப்பு என்றும், கிராமத்தினர் என்றால் மாடர்ன் உடை அணியக்கூடாதா? ஆங்கிலம் பேச கூடாதா? என கேள்வி எழுப்பினார். மேலும் பெண்கள் ஏன் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும்? நீங்க அடக்க ஒடுக்கமா இருக்கீங்களா? என்றார். இதில் ஆடை குறித்து தாமரை பேசியது தவறு என நகரத்தின் அணி வெற்றி பெற்றதாக இசைவாணி அறிவித்தார்.

  இதனை தொடர்ந்து சிபி டைனிங் அறையில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தாமரை, சிபியிடம், நீங்க அடக்க ஒடுக்கமா இருக்கீங்களா? என கேட்டீர்கள், நான் அப்படி என்ன தவறு செய்தேன் என கேள்வி எழுப்பினார். அதற்கு மிகவும் பொறுமையாக பதில் அளித்த சிபி, அடக்க ஒடுக்கம் என்றால் என்ன அக்கா? என்றார். தாமரை எவ்வளவோ பதில் சொல்லியும் சிபி அதே கேள்வியை ரிபிட் செய்தார். இதுதான் அடக்க ஒடுக்கமா? ஓ இதுதான் அடக்க ஒடுக்கமா? என கேட்டு கொண்டிருந்த நிலையில் கடுப்பான தாமரை அங்கிருந்து சென்று விட்டார்.

  இதுக்கு பேரு தான் அடக்க ஒடுக்கமா? தாமரையிடம் சினம் கொண்ட சிபி!

  இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இன்றும் பட்டிமன்றம் டாஸ்க் நடைபெறுவது தெரிகிறது. அதில் நகர அணியில் இருப்பவர்கள் சூப்பராக விளையாடி கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் எங்கள் அணியினரிடம் நான்கு காயின் இருக்கிறது. அங்க ஐந்து பேருமே ஸ்வாஹா என பிரியங்கா கூறுகிறார். இதனால் கடுப்பான தாமரை, தேவையில்லாம பேசாதீங்க, அநியாயமா விளையாடி காயின் தூக்குனது உங்க அணி தானே, மூன்று காயின் இருக்குனு சொல்லுங்க என கூறுகிறார். மேலும் அதை பத்தி ஏன் நீங்க பேசுனீங்க, கமல் சார் வந்து பேசும் வரை நான் அதை பற்றி பேசாமல் தானேஇருந்தேன் எனவும் கோபத்துடன் கூறுகிறார்.

  பட்டிமன்றம் டாஸ்கில் பற்றி எரியும் பிக் பாஸ் வீடு.. கோபத்தின் உச்சத்தில் தாமரை!

  இதனை தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், தாமரைக்கு, ராஜு அட்வைஸ் செய்கிறார். நீ தெரியாமல் பேசுகிறாய், ஓரளவிற்கு தான் சகித்து கொள்ள முடியும், எல்லை மீறி சென்றால் எதுவும் செய்ய முடியாது. எப்போதும் கதவை திறந்தால் சென்று விடுவேன் என கூறுகிறாய், இப்போ கதவை திறந்து வெளியே போங்க என கூறிவிட்டாள் என்ன செய்யவாய்? என ராஜு கேட்கிறார். அதற்கு தாமரை வெளியே சென்றால் நாடகத்திற்கு செல்வேன் என்கிறார்.  இதனால் கடுப்பாகும் ராஜு, ரொம்ப எதார்த்தமாக பேசுவதாக நினைத்து அட்டூழியம் செய்கிறாய், அனைவருக்கும் உன்னை பிடிக்க வேண்டும், இவ என்ன எப்போதும் கத்தி கொண்டே இருக்கிறார் என வெளியில் பார்ப்பவர்கள் நினைப்பார்கள், நீ நியாயமாக நடந்திருந்தாலும் அது வெளியில் நியாயமாக தெரியாது என்கிறார். இதனை கேட்டு தாமரை அமைதியாக இருக்கிறார். தாமரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்து மிகவும் வெகுளியாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக சற்று வித்தியாசமாக பேசுகிறார். அனைவரிடமும் சண்டை போடுவதால் அவர் உண்மையாக வெகுளி இல்லை என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: