ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் 5 ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. பிரியங்கா, ராஜூ, சிபியை பார்க்க மீண்டும் ஒரு வாய்ப்பு!.

பிக் பாஸ் 5 ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. பிரியங்கா, ராஜூ, சிபியை பார்க்க மீண்டும் ஒரு வாய்ப்பு!.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

இவ்வளவு சீக்கிரமாக இந்த பிக் பாஸ் சீசன் முடிந்து விட்டதே எனவே கவலைப்படும் ரசிகர்களுக்கு அடுத்த குட் நியூஸ்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பிரம்மாண்டமாக நடந்து முடிந்த விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க விஜய் டிவிக்கு வருகை தருகின்றனர். டைட்டில் வின்னர் ராஜூ, பிரியங்கா, நிரூப், மக்களின் ஃபேவரெட் சிபி என பிக் பாஸ் சீசன் 5 பட்டாளமே மீண்டும் ஒன்று சேர்கிறது.

  பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான ஃபினாலே கடந்த வாரம் முடிந்தது. எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனல்ஸ் லைவ்வாக நடக்கும். விஜய் டிவியில் அதை லைவ் டெலிகாஸ்ட் செய்வார்கள். ஆனால் இந்த முறை கொரோனா தொற்று காரணமாக ஃபனல்ஸ் லைவ்வாக நடக்கவில்லை. மாறாக எப்போதுமே சனி, ஞாயிறு நிகழ்ச்சி சனிக்கிழமை எடுக்கப்படுவது போல் போன சனிக்கிழமை செட்டில் நிகழ்ச்சி எடுக்கப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை பிக் பாஸ் ஃபைனல்ஸ் ஒளிப்பரப்பட்டது.

  இதையும் படிங்க.. ஆர்ஆர்ஆர் படம் எப்போது வெளியாகும்? - முக்கிய அறிவிப்பு!

  நிகழ்ச்சி டெலிகாஸ்ட் செய்யப்படுவதற்கு முன்பே வின்னர் யார்? ரன்னர் யார்? யாரெல்லாம் வந்தார்கள் என தகவல் இணையத்தில் கசிந்தன. மக்களின் ஒட்டு அடிப்படையில் ராஜூ டைட்டில் வென்றார். பிரியங்கா இரண்டாம் இடத்தை பிடித்தார். ரசிகர்களின் பேராதரவு இந்த இருவருக்கும் கிடைத்தது. மற்ற சீசன்களை போல் இல்லாமல் சீசன் 5 முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்களுடன் தொடங்கியது. 18 போட்டியாளர்கள், தெரியாத முகங்கள், விஜய் டிவி ஆட்கள் என பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் போக போக நிகழ்ச்சியில் சுவாரசியம் கூட பலரும் விரும்பி பார்க்கும் சீசனாக பிக் பாஸ் 5 மாறியது.

  இதையும் படிங்க.. யாஷிகாவுடன் பிரேக்கப் ஆனது உண்மையா? பிக் பாஸ் நிரூப் சொன்ன அதிர்ச்சி கலந்த உண்மை!-

  சண்டை, அன்பு, சமாதானம், டாஸ்க் என இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களது கேம்மை மிகச் சரியாக விளையாடினார்கள். 12 லட்சத்துட்ன் வெளியே போன சிபி, மக்களின் ஃபேவரெட் போட்டியாளரானார். இவ்வளவு சீக்கிரமாக இந்த பிக் பாஸ் சீசன் முடிந்து விட்டதே எனவே கவலைப்படும் ரசிகர்களுக்கு அடுத்த குட் நியூஸ். பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் ராஜூ, பிரியங்கா, சிபி, மதுமிதா, நிரூப் ஆகியோர் விஜய் டிவியில் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வந்துள்ளனர்.
   
  View this post on Instagram

   

  A post shared by Tamil Serials (@tamilserialexpress)  இதற்கு முன்பு இந்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை பிரியங்கா தான் ஆங்கரிங் செய்து வந்தார். அவர் பிக் பாஸூக்கு சென்ற பின்பு மா.கா.பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது ஸ்டார்ட் மியூசிக் சீசன் 3ல் பிக் பாஸ் போட்டியாளர்கள் வருகை தந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. வரும் வாரங்களில் இந்த நிக்ழ்ச்சி விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்படும். அதிலும் முக்கியமாக பிரியங்காவின் ஃபேவரெட் அபிஷேக் ராஜாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv