பிக்பாஸ் சீசன் 5 தொடங்கி 25 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவதாக வெளியேற போகும் நபர் யார் ?என்பது பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் அபிநய், அக்ஷரா, பாவனி, சின்ன பொண்ணு, இமான், பிரியங்கா இசைவாணி மற்றும் வருண் ஆகியோர் உள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக எலிமினேஷனில் இருந்து தப்பித்து வரும் சின்ன பொண்ணு தான் இந்த வாரம் வெளியேறப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
பஞ்சதந்திரம் டாஸ்க்கில் நாணயங்கள் வென்றவர்களுக்கு அந்த நாணயத்தை பயன்படுத்தி வீட்டின் தலைவரையும் மாற்றலாம், அல்லது எலிமினேஷன் பட்டியிலில் இருக்கும் யாரையாவது காப்பாற்றலாம் என்ற பவர் உள்ளதாக பிக்பாஸ் கடந்த வாரமே அறிவித்தார். பிக்பாஸ் சொல்லும்போது மட்டும் தான் அந்த நாணயத்தை பயன்படுத்த முடியும் என்றும் கூறினார். இதனால், கடந்தவாரம் வெளியேறிய அபிஷேக் ராஜாவை நாணயத்தை பயன்படுத்தி காப்பாற்ற முடியவில்லை. இந்த வாரம் நாமினேட் ஆன இசைவாணி, வருண் மற்றும் பாவனியிடம் நாணயங்கள் உள்ளன.
ஏற்கனவே நாணயங்கள் வைத்திருப்பவர்களுக்கு பிக்பாஸ் நாணயங்களை பயன்படுத்தி எலிமினேஷனில் தனக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்கலாம் என்ற வாய்ப்பை இந்த வாரம் யாருமே பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த வார எலிமினேஷன் பட்டியலில் சின்ன பொண்ணு பெயர் வந்த உடனேயே ரசிகர்கள் இவர்தான் வெளியேற போகிறார் என்று கிட்டத்தட்ட உறுதி செய்திருந்தனர். ஆனால் அதற்கு பிறகு தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களை பார்க்கும் பொழுது இசைவாணி வெளியேறுவாரோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுப்பியுள்ளது.
பஞ்சதந்திரம் டாஸ்க்கில் நெருப்பு சக்தி நாணயத்தை வென்ற இசைவாணிக்கு உணவு மற்றும் சமையல் அறை முழுவதும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்ற பவரை பிக்பாஸ் வழங்கினார். ஆனால், இசைவாணி அதனை சரியாக பயன்படுத்தவில்லை. அது மட்டுமின்றி தனக்கு ஒரு பவர் கிடைத்த உடனே அவர் நடந்துகொண்ட விதத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் காணப்பட்டன.
இதுக்கு பேரு தான் அடக்க ஒடுக்கமா? தாமரையிடம் சினம் கொண்ட சிபி!
மூன்று வாரங்கள் வரை தன்னிடம் யாருமே பேசுவதில்லை, தன்னை எல்லாரும் ஒதுக்கி வைக்கிறார்கள் என்று தனிமைப் படுத்திக் கொண்டு இசைவாணி இந்த வாரம் சமையலறை மட்டுமே தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் பிக்பாஸ் வீட்டுக்கு அவர் தான் தலைவர் என்ற ரீதியில் ஒரு சில விஷயங்களில் நடந்து கொண்டுள்ளார். இந்த காரணங்களுக்காக இந்த வாரம் இசைவாணி எலிமினேட் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதே போல, அபிநய் எலிமினேட் செய்யப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.
பட்டிமன்றம் டாஸ்கில் பற்றி எரியும் பிக் பாஸ் வீடு.. கோபத்தின் உச்சத்தில் தாமரை!
இந்த சீசன் தொடங்கி நான்கு வாரங்கள் முடியும் நிலையில், அபினய் கிட்டத்தட்ட எதுவுமே செய்வதில்லை. முந்தைய பிக் பாஸ் சீசனின் ரமேஷ் போல தான் அபினய் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். சின்ன பொண்ணு வெளியேறுவதற்கு அதிகமாக வாய்ப்பு இருந்தாலும் ஏகப்பட்ட சர்ச்சைகள் காரணமாக இசைவாணியும் இந்த வாரம் எலிமினேட் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேலை இந்த வாரம் நாணயத்தின் பவரை பயன்படுத்தலாம் என கூறப்பட்டால் எலிமினேஷனில் மாற்றம் ஏற்படும் என்பதால் யார் வெளியேறுவார்? என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil 5, Vijay tv