பிக் பாஸ் தாமரை தனது சொந்த கிராமத்தில் கடன் வாங்கி கட்டிய வீட்டை ரசிகர்களுக்கு யூடியூப் சேனலில் காட்டியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்ட மற்றும் மெகா ஹிட் ஷோவாக இருந்து வரும் பிக் பாஸ் ஷோவின் 6வது சீசன் தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது. இதற்கு முன்பு ஒளிப்பரப்பான 5வது சீசனில் மேடை நாடக கலைஞரான தாமரை செல்வி கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனார். பெரிய பின்புலம் இல்லாத சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர் தனது வெள்ளந்தியான பேச்சு மற்றும் நடத்தை அதே சமயம் கேமில் சுதாரிப்பாக இருந்தது என பல பரிமாணங்களை இயல்பாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் .
சீரியல் நடிகர் அர்னவுக்கு மேலும் சிக்கல்... ஜாமீன் மனுவை நிராகரித்தது நீதிமன்றம்!
குறிப்பாக பொருளாதாரம் குறைந்த வர்க்கத்தை சேர்ந்த தாமரை லட்சக்கணக்கில் பணத்தை எடுத்து கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு கிடைத்தும், இறுதி வரை நின்று விளையாடினார். பின்பு அவருக்கு பிபி அல்டிமேட்டில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிலும் ஸ்கோர் செய்தார். பின்பு தனது கணவர் பார்த்தியுடன் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தாமரை களம் இறங்கினார். அதிலும் விடாமல் ஆடி ஃபைனல்ஸ் வரை சென்றார். இப்படி கிடைத்த இடமெல்லாம் தனது திறமையை வெளிப்படுத்திய தாமரை இப்போது வெள்ளித்திரையிலும் நடிக்க தொடங்கி விட்டார்.
பூஜை அறை இல்லை.. ஹாலில் அம்மாவின் சிலை! ஆர்த்தி - கணேஷ்கர் வீட்டை பார்த்து இருக்கீங்களா?
இந்நிலையில் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வரும் தாமரை, ஹோம் டூர் வீடியோவை வெளியிட்டுள்ளார். தாமரை வீடு வாங்கிய கதையை பிக் பாஸில் ஒருமுறை ஷேர் செய்து இருந்தார். கடன், வட்டிக்கு வாங்கிய பணத்தை வைத்து இந்த வீட்டை தாமரை வாங்கி இருக்கிறார். பின்பு பிக் பாஸில் வந்த பணத்தை வைத்து அந்த கடனை கொஞ்சம் கொஞ்சமாக கட்டி வருகிறார்.
அவரின் ஹோம் டூர் வீடியோவில் வீட்டில் இருக்கும் ரூம்கள், கிச்சன் ஆகியவற்றை சுற்றி காட்டுகிறார். ஹாலில் பெரிய சைஸ் சோஃபா, கிச்சனில் வருண் வாங்கி தந்த ஃபிரிட்ஜ், பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட போட்டிகளில் ஜெயித்த கேஸ் அடுப்பு, மிக்ஸி என எல்லாவற்றையும் வீட்டில் வைத்து பயன்படுத்துகிறார். தாமரையின் வீட்டை பார்த்த ரசிகர்கள் அவரின் முயற்சிக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
இதுமட்டுமில்லை புதுக்கோட்டையில் இருக்கும் தாமரையின் தாய் வீட்டை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் புதுபித்து தருவதாகவும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay tv