Home /News /entertainment /

பிக் பாஸ் : தாமரையின் நாடக கண்ணீர்.. சிக்கி சின்னாபின்னமாகும் பிரியங்கா! கமலிடம் செல்லப்போகும் பஞ்சாயத்து

பிக் பாஸ் : தாமரையின் நாடக கண்ணீர்.. சிக்கி சின்னாபின்னமாகும் பிரியங்கா! கமலிடம் செல்லப்போகும் பஞ்சாயத்து

பிக் பாஸ் பிரியங்கா , தாமரை

பிக் பாஸ் பிரியங்கா , தாமரை

Bigg Boss day 67 review : நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் குரலுக்கே மரியாதை இல்லாமல் போனது.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
  பிக் பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் பிரியங்கா vs தாமரை சண்டை வாய்கால் தகராறு போல நீள, வெளியில் தாமரை பேசுவது சரியா? பிரியங்கா செய்வது சரியா? என தலைப்புகளுடன் பஞ்சாயத்து தொடங்கி விட்டது. ஆனால் உண்மையில் இந்த பஞ்சாயத்துக்கான தீர்ப்பை வார இறுதியில் கமல்ஹாசனே சொல்வார். சஞ்சீவ் சொன்னது போல் கமல்ஹாசன்,பிரியங்காவை டார்கெட் செய்தாலும் சரி, தாமரையை மலர வைத்தாலும் சரி தீர்ப்பு கிடைத்துவிடும்.

  67 ஆம் நாள் காலை ‘எங்க ஏரியா உள்ள வராத’ பாடலுடன் நாள் தொடங்கியது. பிரியங்கா, இந்த வார தலைவர் பாவனியிடம் பாத்ரூம் பிரச்சனை பற்றி பேசி கொண்டிருந்தார். 18 பேருடன் தொடங்கிய போதே 2 பாத்ரூம் மட்டும் தான் இருப்பது சங்கடமான விஷயம்  என விவாதிக்கப்பட்டது. இப்போது கிட்டத்தட்ட பாதி பேர் குறைந்து விட்டனர். இருப்பினும் சில தவிர்க்க முடியாத பிரச்னைகள் இருப்பதை நிகழ்ச்சியை பார்க்கும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

  வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்திருக்கும் அமீரை அழைத்து காது கடித்தார் அண்ணாச்சி. அதாவது பாவனியுடன் லிமிட்டாக வைத்துக் கொள்ளும்படி அட்வைஸ் செய்தார். எல்லை மீறாமல் அழகான நட்பை தொடரும் படி அறிவுறுத்தினார். அண்ணாச்சிக்கு ஏன் இந்த திடீர் கரிசனம் என்று தெரியவில்லை. கொஞ்ச நேரத்தில் இதை அப்படியே ராஜூவிடம் ஒப்பித்தார். ராஜூ, நேற்று நானும் அமீரும் இதை பற்றி ஏற்கெனவே பேசினோம் என அண்ணாச்சிக்கு ஷாக் கொடுத்தார். அண்ணாச்சியின் மைண்ட் வாய்ஸ், (வர வர ராஜூ தனியா கேம் விளையாட ஆரம்பிச்சிடானோ)

  இந்த பஞ்சாயத்து முடிந்த உடனே நேராக டாஸ்குக்கு சென்றனர் ஹவுஸ்மேட்ஸ். அரசியல் டாஸ்க் இரண்டாவது நாளாக தொடங்கியது. தாமரை கட்சியினர் கொடி ஏற்றும் விழாவுக்கு மற்ற 2 கட்சிகளையும் அழைத்தனர். தாமரை, சிபி, சஞ்சீவ், பிரியங்காவுக்கு ஆரத்தி எடுத்தார். அக்‌ஷரா சம்பந்தமே இல்லாமல் ஒரு பக்கம் கீச் கீச் என கத்திக் கொண்டிருந்தார். இதனால் சஞ்சீவே கடுப்பானது பச்சையாக தெரிந்தது. உரக்க சொல் கட்சியின் தலைவர் பிரியங்கா, புகார் பெட்டியை கொண்டு சென்று நிரூப்பை ஜாடை மாடையாக பேசினார். இதனால் கடுப்பான நிரூப், நேரா பிரியங்காவிடம் சென்று உனக்கும் எனக்கும் என்ன பிரச்சனை? என வினவினார். நீ முதுகில் குத்தினாய் என்பது பிரியங்காவின் வாதம். நிரூப் அதற்கான காரணத்தை சொல்ல பிரியங்காவின் கண்ணில் இருந்து உடனே சாரை சாரையாக கண்ணீர்.

  அடுத்தது YES /NO டாஸ்க் ஆக்டிவிட்டி ஏரியாவில் தொடங்கியது. இதில் சூப்பராக ஸ்கோர் செய்தது சஞ்சீவ் தான். பிரியங்கா இந்த டாஸ்கில் கோட்டை விட்டார். அண்ணாச்சி பற்றி, ராஜூ பற்றி, தாமரை பற்றி புட்டு புட்டு வைத்தார். ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் எஸ் சொல்ல, ஸ்கோர் 34 ஐ எட்டியது. சிபி, பாவனி - அபினவ் உறவை மீண்டும் மேடைக்கு ஏற்ற, இந்த முறை அமீரும் அதை முன் மொழிந்தார். இதனால் பாவனிக்கு அமீர் மீது கோபம் வந்தது.

  அதை பற்றி அமீரும், பாவனியும் பேசி சரி செய்தனர். அண்ணாச்சி பேசியது பற்றியும் அமீர், பாவனியிடம் சொல்ல அவரின் முகம் மாறியது. புரமோவில் சாப்பாடு பற்றி பிரியங்கா பேசிய காட்சிகள் எபிசோடில் உப்பு சப்பு இல்லாமல் முடிந்தது. உரக்க சொல்லின் ரேப் பாடல் ஹவுஸ்மேட்ஸின் கவனத்தை பெற்றது. ஆனால் அவர்கள் தமிழில் எழுத்துப் பிழை இருப்பதாக அண்ணாச்சி குத்தி காட்டி மட்டமாக பேசினார். அடுத்து கார்டன் ஏரியாவில் கொடி ஏத்தும் டாஸ்க் தொடங்கியது.

  இதில் தான் பிரச்சனை வெடித்தது. உரக்க சொல் கட்சியின் பாவனி, பிரியங்கா புதுவித ஸ்டேட்ஜியை கையாள, நிரூப், வருண், அண்ணாச்சி காண்டாகினர். பிளான் போட்டு பிரியங்காவிடம் இருந்த கம்புகளை பிடிங்கினர். இதில் பிரியங்காவுக்கு கை கால்களில் பலத்த அடி. பிரியங்காவுக்கு கோபம் தலைக்கு ஏரி நிரூப்பை பயங்கரமாக தாக்கினார். சிபி இந்த சண்டையை தடுத்தார். மற்ற அனைவரும் கம்புகளை பறிப்பதில் தான் கவனம் செலுத்தினர்.

  இதைப் பார்த்த தாமரை ஏன் இப்படி பண்றீங்கன்னு பொதுவா சொல்ல, அபினவ்’ நீ மூடிட்டு போ ’என்றார். உடனே தாமரை உடம்புக்குள் சரோஜா அக்கா நுழைய சாமி ஆடத்தொடங்கினார். என் மேலே இருக்குற காண்டுல தான் இப்படி பேசுறீங்க, நான் பொதுவா தான் சொன்னேன் என்றார். எல்லோரின் சப்போர்டும் தாமரைக்கு தான் இருந்தது. தாமரை போயிட்ட, யாரு சமைப்பா, பாத்திரம் கழுவா அந்த அன்பு தான். பிரியங்கா டீமுக்கு மொத்த ஹவுஸ்மேட்ஸூம் எதிராக பேச, அமீர் சண்டையை நிறுத்த முயற்சி செய்தார். கடைசி வரை தாமரை விடுவதாக இல்லை. நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் குரலுக்கே மரியாதை இல்லாமல் போனது. உடனே பிரியங்கா “தெரியல தெரியலன்னு சொல்றீங்க நாடகம் நல்லா போடுறீங்க”ன்னு உரக்க குரலில் வசனம் பேச, உடனே தாமரை, பிரியங்கா என் நாடக தொழிலை மட்டப்படுத்தி பேசுவதாக முதலை கண்ணீரை வடித்தார்.

  ஆனால், உண்மையில் பிரியங்கா அந்த நேரத்தில் நாடகம் ஆடுறீங்கன்னு இயல்பான வார்த்தையை தான் பயன்படுத்தினார். ஆனால் அதை தாமரை மிக சாதுரியமாக நாடக தொழிலை சொன்னார் என ஹவுஸ்மேட்ஸை நம்ப வைத்து அதிலும் ஸ்கோரும் செய்தார். இந்த திறமை தான் பிரியங்காவிடம் இல்லை. உடனே, வருண், நிரூப், ராஜூ தாமரைக்கு சொம்பு தூக்கி சோறு ஊட்டிவிடும் அளவுக்கு சென்றனர். பிரியங்காவின் முகத்தில் ரத்தம் வரும் அளவுக்கு காயம் ஏற்பட்டது. ஆனால் அதை அண்ணாச்சி மட்டுமே வந்து விசாரித்தாரே தவிர, மற்ற அனைவரும் தாமரை கண்ணை துடைக்க சென்றனர். இத்தனை நாட்களாக வருணின் குரலை அடக்க யாரும் இல்லை என நினைத்திருக்கையில், அமீர் வருணின் குரலை அப்படியே ஆஃப் செய்தார். அமீரிடம் சைலண்டாக சரண்டர் ஆனார் வருண்.

  நாடகம் ஆடுவது யார்? பிரியங்காவின் முழக்கத்தால் அழும் தாமரை!

  பிரியங்காவின் பெயரை எப்படியாவது கெடுக்க வேண்டும் என தாமரை சபதம் எடுத்து உள்ளே வந்து இருப்பாருன்னு தெரியல,. ஆனால் தாமரையுடனான எல்லா சண்டையிலும் பிரியங்காவின் பெயர் சிக்கி சின்னாபின்னமாகுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 5, Vijay tv

  அடுத்த செய்தி