• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • ராஜு தவிர கன்டெண்ட் தர யாரும் தயாரா இல்லை.. இவங்கள வச்சி 100 நாள் முடியுமா பாஸ்?

ராஜு தவிர கன்டெண்ட் தர யாரும் தயாரா இல்லை.. இவங்கள வச்சி 100 நாள் முடியுமா பாஸ்?

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

Bigg Boss Tamil 5 - Day 2 Review | ராஜூவை தவிர கேமரா யாரு பக்கமும் ஃபோக்கஸ் ஆகவே மாட்டுது.

 • Share this:
  பிக் பாஸ் 5 சீசனில் 2 ஆவது நாளே கன்டெண்ட் கிடைக்காமல் கேமரா ராஜூவை மட்டுமே சுத்தி சுத்தி படம் பிடிப்பது அப்பட்டமாக தெரிகிறது.

  விஜய் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி மிஷினான பிக் பாஸ் 5 சீசன் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் கடந்த 3 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளே ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். சோஷியம் மீடியாவில் அடிப்பட்ட பெயர்கள் யாரும் போட்டியாளராக வரவில்லை. சரி அவங்க தான் வரல வேற யாராச்சும் தெரிஞ்சா முகமா வருவாங்கன்னு பார்த்தா எல்லாமே மாடல். இசைவாணி, பிரியங்கா, ராஜூ, சின்னப்பொண்ணு, இமான் அண்ணாச்சி இவங்க பேரு மட்டும் தான் இப்ப வர சரளமாக எல்லோருக்கும் சொல்ல வருது. மத்த போட்டியாளர்கள் பெயரை ஒரு நாள் ஃபுல்லா உட்கார்ந்து மனப்பாடம் பண்ணனும் போல. அதுக்குள்ள இவங்க பேரு ரிஜிஸ்டர் ஆகனும்னா ஏதாவது சர்ச்சையில் சிக்கினா தான் உண்டு. ஆனா அது நடக்காது .  பிக் பாஸூக்கே அது தெரிஞ்சிடுச்சி போல  ராஜூவை தவிர கேமரா யாரு பக்கமும் ஃபோக்கஸ் ஆகவே மாட்டுது.

  2 ஆவது நாள் காலையில் நாங்களும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் லேட்டஸ் ட்ரெண்டான “பேரு வெச்சாலும், வெக்காம போனாலும்” பாடலை பிக் பாஸ் பிளே செய்ய எல்லோரும் ஜாலி மூடில் ஆடினர். அதற்கு முன்பே எல்லோரும் குளித்து முடித்து சாப்பிடவும் ரெடி ஆகிவிட்டனர். இசைவாணிக்கு வந்த தண்ணீர் பிரச்சனையை இமான் அண்ணாச்சி தீர்த்து வைத்தார். சோஃபாவில் டீ குடித்தப்படி 4 வருஷமாக பிக் பாஸில் இல்லாத ஒன்றை இந்த சீசனில் செய்ய இருப்பதாக உயர்ந்த மனிதனும், காதல் மன்னனின் பேரனும் பேசிக் கொண்டிருக்க பிளான் பண்ணி பண்ணலாம் அப்படின்னு எண்டு கார்டு போடுகிறார் இமான் அண்ணாச்சி.

  டிவியை பார்த்து தமிழ் பேச கத்துகிட்ட மதுமிதா கிட்ட நீ அப்படியே பேசு எனக்கு பிடிக்கும் என்கிறார் பிரியங்கா. (உனக்கு மட்டும் பிடிச்சா போதுமா மா). சின்ன மளிகை கடையே போடுற அளவுக்கு சமையல் பொருட்கள் வந்து இறங்கினர். அடுத்தது பிக் பாஸ் உத்தரவின் பேரில் வேலைகளை செய்ய டீம் பிரிக்கப்பட்டது. கவினின் நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் ராஜூ பாத்ரூம் பக்கம் ஒதுங்கினார். சின்ன பொண்ணு சமையம் பக்கம் செல்ல, நமீதா பாத்திரத்தை கையில் எடுத்தார். கடைசியாக கிளீனிங் வொர்க பாவனிக்கு கொடுக்கப்பட்டது. அவரவர்கள் தங்கள் டீமூக்கான ஆட்களை தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.  விட்டா போதும் என்றப்படி எழுந்து ஓடிய போட்டியாளர்கள், ஏதோ கல்யாண வீட்டுக்கு போன மாதிரி பல சொந்தகாரர்களை பார்த்த மாதிரி வீடு, வாசல், குடும்பம் பத்தி ஒவ்வொருவரிடமும் விசாரித்துக் கொண்டிருந்தனர். ராஜூ யாருக்கு கல்யாணம் ஆயிடுச்சி யாருக்கு ஆகலுன்னு லிஸ்ட் வாங்கி கொண்டிருந்தார். அபிஷேக் ரொம்ப ஓப்பனா, “எனக்கு கல்யாணமும் ஆயிடூச்சு டிவேர்ஸூம் ஆயீடுச்சின்னு” முடிச்சிட்டார்.

  also read... எனக்கு திருமண வாழ்க்கையில் ராசியே இல்லை’ - சின்னத்தம்பி பாவனி ரெட்டி!

  திரும்பமும் கேமரா, ராஜூவை ஃபோக்ஸ் செய்ய அடுத்த கண்டெண்ட் கொடுத்தார் ராஜூ. அக்ஷராவை பார்த்து அமலா என்று சொல்ல, அவரோ அமலாபால் போலவா என ஆசையுடன் கேட்க, ”அந்த அமலா இல்லம்மா அக்னி நட்சத்திரம் அமலா என்று ராஜூ சொல்ல “ நாகார்ஜூனா wife அமலாவா” ன்னு சோகமாக கேட்க, கடைசியாக தேங்க் யூவையும் ராஜூவே கேட்டு வாங்கினார்.

  புரமோவில் காட்டப்பட்ட பேய் கதை எபிசோடில் பயங்கர மொக்கையாக இருந்தது. ராஜூ நல்ல கதை ஆசிரியர் என்றால் தாமரை செல்வி பயங்கர நடிகை போல. ராஜூ சொன்ன பேய் கதைக்கு பயப்படுற மாதிரியே என்னா நடிப்பு. 2 ஆவது நாள் என்பதால் யாரும் யாரை பற்றியும் இதுவரை குறை சொல்லவோ, காசீப்பும் பேசவில்லை. அதனால் நமக்கும் எழுத ஒன்னும் கிடைக்கவில்லை. தாமரை செல்வி கடைசியாக கேமாராவை பார்த்து  நன்றி சொன்ன விதம் கவனிக்க வேண்டிய ஒன்று. ராஜூவை தவிர கன்டெண்ட் தர யாரும் தயாரா இல்லை என்றால் இந்த பிக் பாஸை பார்க்கவும் யாரும் தயாராக இருக்க மாட்டார்கள்.

  இந்த செய்தியை ஆடியோவாக கேட்க..

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: