முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிக்பாஸ் எவிக்‌ஷன் : இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவர் தானாம்!

பிக்பாஸ் எவிக்‌ஷன் : இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவர் தானாம்!

பிக் பாஸ் எவிக்‌ஷன்

பிக் பாஸ் எவிக்‌ஷன்

பிக் பாஸ் நாமினேஷன் லிஸ்டில் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்பது பற்றிய புதிய தகவல் கசிந்துள்ளது

  • Last Updated :

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேற போவது யார்? என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.இந்த வாரம் 6 பேர் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டு உள்ளனர்.

ரசிகர்களின் பேராதரவு பெற்ற பிரமாண்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 55 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ம் தேதி துவங்கியது. பிக்பாஸின் 4 சீசன்களை போலவே இந்த சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசன் தான் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் தொகுத்து வழங்கி கொண்டிருந்தார். வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இவர் வரும் எபிசோட்கள் பல பஞ்சாயத்துகளை உள்ளடக்கி இருக்கும் என்பதால் பிக்பாஸ் ஷோ களை கட்டும். சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பிய கமலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் இந்த வார ஷோவை பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது உறுதியான தகவல்? என்பது தெரியவில்லை. இதனிடையே 18 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த பிக்பாஸ் சீசனில் வாரம் தோறும் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவது வழக்கம். எலிமினேஷன் துவங்கும் முன்பே கேமில் பங்கேற்று இருந்த திருநங்கை நமிதா மாரிமுத்து திடீரென வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர் அடுத்தடுத்த வாரங்களில் நாடியா சாங், அபிஷேக் ராஜா, சின்னபொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் வெளியேறினர். பின்னர் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் அபிஷேக் ராஜா. தொடர்ந்து டான்ஸ் கோரியோகிராஃபர் அமீர் என்பவரும் வைல்ட் கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி ஆனார். இவரை தொடர்ந்து பிரபல சின்னத்திரை நடிகர் மற்றும் தொகுப்பாளர் & தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த வார நிகழ்ச்சியை கமலுக்கு பதில் யார் தொகுத்து வழங்க போகிறார்கள் என்பது தெரியாத நிலையில், ஏற்கனவே நாமினேஷன் செய்யப்பட்டு உள்ளவர்களில் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்பது பற்றிய புதிய தகவல் கசிந்துள்ளது.

அடுத்த பிக் பாஸ் தொகுப்பாளர் யார்... கேள்விக்கான விடை இதோ

இந்த வாரம் 6 பேர் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டு உள்ளனர். இமான் அண்ணாச்சி, நிரூப், பாவனி ரெட்டி, பிரியங்கா தேஷ்பாண்டே, தாமரை, ஐக்கி பெர்ரி ஆகியோர் இந்த வார எலிமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், இவர்களில் ஐக்கி பெர்ரி பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேற போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பட்டியலில் இடம் பெற்றுள்ள 6 பேரில் தாமரைச்செல்வியும், ஐக்கி பெர்ரியும் தான் குறைவான வாக்குகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. எனவே இவர்கள் இருவரில் ஐக்கி பெர்ரி தான் இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Bigg Boss Tamil 5, Vijay tv