• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • சினிமா ஆசையில் வீட்டை விட்டு வந்தவர்.. இன்று அதே சினிமாவால் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார் ராஜூ!

சினிமா ஆசையில் வீட்டை விட்டு வந்தவர்.. இன்று அதே சினிமாவால் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார் ராஜூ!

பிக் பாஸ் ராஜூ

பிக் பாஸ் ராஜூ

. ராஜூவின் திறமையும் முயற்சியும் தான் இந்த அளவுக்கு பெயரை வங்கி தந்துள்ளது என்கிறார் ராஜூவின் காதல் மனைவி.

 • Last Updated :
 • Share this:
  பிக் பாஸ் வீட்டில் முதல் நாளிருந்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ள ஸ்கிரிப்ட் ரைட்டர் ராஜூ ஜெயமோகன் சினிமாவில் ஜெயித்த கதை

  பிக் பாஸ் சீசன் 5 தொடங்கி 10 நாட்கள் ஆகிய நிலையில் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்களின் நிஜ முகங்களை காட்டி வருகின்றனர். அந்த வகையில் தன்னுள் பல திறமைகளை வைத்து கொண்டு எப்போதுமே சிந்தனையுடனே ஸ்கிரிப்ட் ரைட்டராக வலம வரும் ராஜூ ஜெயமோகன் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதிலும் முக்கியமாக கதை சொல்லட்டுமா டாஸ்கில் ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து லைக் போட்டு டிஸ்லைக்கு விரிவாக்க சொல்லி அபிஷேக்கை ஓரங்கட்டிவிட்டார் ராஜூ. இவரின் சினிமா பயணம் குறித்து இங்கே பார்க்கலாம்.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கத்தி என்ற கதிரேசன் ரோலில் தற்போது ராஜூ ஜெயமோகன் நடித்து வருகிறார். இவர் பிக் பாஸ் வீட்டுக்கு சென்ற பின்பு சீரியல் இவரின் ரோல் தொடர்ந்து காட்டப்பட்டு வருகிறது. மொத்தமாக 100 நட்களுக்கும் சேர்த்து நடித்து கொடுத்துவிட்டார் போல. இந்த சீரியலில் இவருக்கும் காயத்ரிக்குமான ரொமான்ஸ் சீன்களுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ்கள் உண்டு. இதுவரை பல சீரியல்களில், ஒருசில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கத்தி ரோல் ராஜூக்கு பெரிய ரீச்சை வாங்கி தந்துள்ளது. முக்கியமாக இந்த சீரியலில் அவரின் பேச்சு பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

  ராஜூவின் சொந்த ஊர் திருநெல்வேலி. பிஎஸ்சி விஷ்வல் கம்யூனிகேஷன் படித்து முடித்துவிட்டு நிறைய ஆசைகள் கனவுகளுடன் சினிமாவுக்கு வந்தார். சினிமா மீது இருந்த ஆசையை ராஜூவை வீட்டை விட்டு வெளியேற செய்தது. பின்பு இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். அதன் பின்பு தான் விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் தொடரின் கல்லூரி சாலை சீசனில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

  பிக் பாஸ் 5 : அப்பாவில் தொடங்கி அப்துல்கலாம் வரை சென்ற அபிஷேக் கதை!

  அந்த வாய்ப்பை நழுவ விடாமல் சீரியலில் நடித்தார். அதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார். வேட்டையன் ரோலில் கவின் நடிக்க அவரின் நண்பராக ராஜூ நடித்தார். இந்த தொடரின் மூலம் இவர்களின் நட்பு நெருக்கமானது. ராஜூவின் முதல் சினிமா நண்பர் கவின் தான். அதனால் தான் கவின் தனது முதல் படத்தில் ராஜூவையும் நடிக்க வைத்திருப்பார். ஆனாலும் வெள்ளிதிரையில் போதிய வரவேற்பு கிடைக்காததால் மீண்டும் சின்னத்திரை பக்கமே வந்தார் ராஜூ. அப்போது தான் பாரதி கண்ணம்மா சீரியலில் வருண் ரோல் கிடைத்தது. சீரியலில் நடித்தாலும் தன்னுடைய ஸ்கிரிப் ரைட்டிங் மீது கவனத்தை தவறவிடாத ராஜூ தொடர்ந்து அதை செய்து வந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பல ஷோக்களின் ஸ்கிரிப் ரைட்டர் ராஜூ தான். சூப்பர் பிரியங்காவின் முதல் நிகழ்ச்சியின் ஸ்கிரிப் ரைட்டரும் ராஜூ மோகன் தான். இதை பிரியங்காவே பிக் பாஸ் வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.   
  Instagram இல் இந்த இடுகையைக் காண்க

   

  Raju Jeyamohan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@raju_jeyamohan)


  அதே சமயம் ராஜூ கூட்டத்தில் ஒருவனாக நிற்க வாய்ப்பு தேடி அலைந்த காலமும் உண்டு. நண்பர்கள் அவருக்கு பக்க பலமாக இருந்துள்ளனர். பல போராட்டங்களுக்கு பிறகே ராஜூ சின்னத்திரையில் இந்த இடத்தைப் பிடித்துள்ளார். எந்த சினிமா மீது கொண்ட காதலால் அவர் வீட்டை விட்டு வந்தாரோ அதே சினிமா தான் இன்று ராஜூவுக்கு பிக் பாஸ் வாய்ப்பை தேடி தந்துள்ளது. 100 நாட்கள் ராஜூ வீட்டில் தாக்குப்பிடிப்பார் என்ற நம்பிக்கையும் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. ராஜூவின் திறமையும் முயற்சியும் தான் இந்த அளவுக்கு பெயரை வங்கி தந்துள்ளது என்கிறார் ராஜூவின் காதல் மனைவி.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: