• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • bigg boss 5 : ராஜூ - பிரியங்காவுக்கு இடையில் இப்படி ஒரு கெமிஸ்ட்ரியா?

bigg boss 5 : ராஜூ - பிரியங்காவுக்கு இடையில் இப்படி ஒரு கெமிஸ்ட்ரியா?

பிக் பாஸ்

பிக் பாஸ்

bigg boss 5 tamil day 45 review : பிரியங்காவும் ராஜூவும் கைக்கோர்த்து நின்றனர். கிட்டத்தட்ட 20 நிமிடம் வேற லெவலில் கலாய்த்து தள்ளினார் ராஜூ.

 • Share this:
  பிக் பாஸ் 5 ஆவது சீசனில் நேற்றைய எபிசோடில் ராஜூவும் பிரியங்காவும் சேர்ந்து 1 மணி நேர காமெடி படத்தையே ரிலீஸ் செய்துவிட்டனர்.

  45 ஆவது நாள் ’ஏத்தி ஏத்தி ‘ பாடலுடன் நாள் தொடங்கியது. (வருணுக்காகவே டெடிகேட் செய்யப்பட்ட பாடல் போல). வழக்கம் போல் ஐக்கி பெர்ரி கண்ணை பறிக்கும் கலரில் நைட் ட்ரெஸ் உடன் குதித்து குதித்து கேமராவில் முகத்தை காட்டினார். டான்ஸ் முடிந்தது வருண் சுவாரசியமாக ஏதாவது கொடுக்க வேண்டும். இல்லையெனில் சனிக்கிழமை கிழித்து விடுவார்கள் என்ற பயத்தில் பப்ளிக் டாய்லெட் டாஸ்க்கை ஹவுஸ்மேட்ஸ்-க்கு கொடுத்தார். அதாவது, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பாத்ரூம் பொது கழிப்பறையாக மாறும். லைனில் நின்று தான் ஒவ்வொருவராக பாத்ரூமை யூஸ் செய்ய வேண்டும்.  ஒரு கற்பனை போல் இந்த டாஸ்கை வருண் கொடுத்தார்.

  நிரூப், பிரியங்கா, அபிநவ்வை அதை சுவாரசியமாக செய்தனர். ஆனால் அந்த லைனில் கூட அக்‌ஷரா நின்று போகவில்லை. (இதற்கு வருணும் எதும் சொல்லவில்லை ஆனா நாங்க நோட் பண்ணிட்டோம்). முதல் நாள் கண்ணாடி டாஸ்க் நேற்றும் தொடர்ந்தது. டாஸ்க் பட்டன் அடித்தும் இசை டாஸ்க்கை தொடங்காததால் அவரிடம் இருந்த பேட்ச் பறிக்கப்பட்டது. அதை அண்ணாச்சி பெற்றுக் கொண்டார். பாவனியும் ராஜூவும் கைக்கோர்த்து லிவிங் ஏரியாவில் நின்றனர். தனது மனதில் பட்ட எல்லாவற்றையும் பாவனி கொட்டினார். பாவனியின் பேச்சில் ராஜூ, தன்னை பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது, நான் அப்படியில்லை ஏன் என்னை மட்டும் அப்படி சொல்கிறீர்கள்? என்பது தான அவரின் குமுறலாக இருந்தது.

  பாவனி பேச, பேச, ராஜூ, சேது விக்ரம் போலவே முகத்தை வைத்துக் கொண்டிருந்தார். எனக்கு உங்களை பிடிக்கும் ராஜூ, உண்மையா இந்த வீட்டில் உங்களை தான் ரொமப் பிடிக்கும் என பாவனி அழுத்தி அழுத்தி சொன்னது ராஜூவுக்கு விஷ பாட்டில் எதோ ட்ரை பண்ணுகிறது என்பது போலவே மைண்டில் ஓடியது போல. கிச்சன் ஏரியாவில் பிரியங்கா சமையலில் டிராமா பண்ணாத என்ற வார்த்தையை யதார்த்தமாக சொல்ல அதை வைத்து மிகப் பெரிய டிராமா செய்தார் தாமரை (இந்தம்மா வீட்டில் இருப்பவர்களை பேசாத பேச்சா). கண்கலங்கிய தாமரையை கட்டிப்பிடி வைத்தியம் மூலம் சரிசெய்தார் பிரியங்கா.

  அடுத்தது பிரியங்காவும் தாமரையும் கைக்கோர்த்து நின்றனர். பிரியங்கா நிறைய சொல்வார் என எதிர்பார்க்கப்பட்டது (எதிர்ப்பார்த்தோம்) ஆனால் தாமரை பற்றி ஃபுல் பாசிட்டிவாக பேசினார். இது பாவனிக்கும் அபிநவ்வுக்கும் பிடிக்கவில்லை என்பது அவர்களின் முகத்தில் தெரிந்தது. கொஞ்ச நேரம் கழித்து இருவரிடமும் கருத்து கேட்டார் பிரியங்கா. அதற்கு பாவனி சொன்ன பாயிண்ட் அருமை. பல வாரங்கள் கழித்து எவிக்‌ஷன் லிஸ்டில் நாமினேஷனுக்கு தாமரை பெயர் வந்தது உடனே அவர் வீட்டுக்கு போறேன்ன்னு டிராமா செய்த விதம் போலி என்றார். அதே போல் அவருக்கு கோபம் வந்தால் வேற நியாயம், மற்றவர்களுக்கு கோபம் வந்தால் வேற நியாயம் என்ற பாயிண்ட்டையும் எடுத்து வைத்தார். (பிரியங்கா மைண்ட் வாய்ஸ் கொஞ்சம் ஓவரா புகழ்ந்துட்டோமா?)

  கண்ணாடி டாஸ்கில் 2 வது சுற்று ஆரம்பமானது. யார் யார் யாரைப்போல் பிரதிபலிக்க வேண்டும் என்று பிக் பாஸ் லிஸ்டு அனுப்பினார். அதில் சிபியின் கண்ணாடி அபிநவ், பாவனியின் கண்ணாடி அக்‌ஷரா, இசையின் கண்ணாடி தாமரை, ஐக்கி பெர்ரியின் கண்ணாடி அண்ணாச்சி, நிரூப்பை வருண் பிரதிபலிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. சிபியின் ஜட்டி காமெடி செம்ம ரகளை. நிரூப், வருண் கையாலே அக்‌ஷரா மீது தண்ணீர் ஊற்ற வைத்தார். ஐக்கி பெர்ரி போல் இமான் அண்ணாச்சி விக் எல்லா செட் செய்து கொண்டார். ராஜூ - பிரியங்கா காமினேஷன் தான் அல்டிமேட். வயிறு குலங்க சிரிக்க வைத்தனர் இருவரும். பிரியங்காவை போல நடந்து கொண்டு ,சிரித்து கொண்டு ராஜூ கலக்கினார். கேமரா சுற்றி சுற்றி இருவரையும் படம் எடுத்தது.

  என்னது! பாரதிக்கு கத்தி குத்தா? அதுக்கும் கண்ணம்மா தான் காரணமா?

  இசையும் தாமரையும் என்ன செய்தார்கள் கூட கேமராவில் காட்டவில்லை. நடுவில் கிடைத்த கேப்பில் அண்ணாச்சி இசையின் முகத்தில் காலை தூக்கி விளையாட அது சண்டையில் முடிந்தது. அண்ணாச்சி உடனே மன்னிப்பும் கேட்டார். ஆனால் இசை அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நடுவில் மூக்கை நுழைத்த ஐக்கி பெர்ரிக்கும் நோஸ் கட்.

  பிரியங்காவும் ராஜூவும் கைக்கோர்த்து நின்றனர். கிட்டத்தட்ட 20 நிமிடம் வேற லெவலில் கலாய்த்து தள்ளினார் ராஜூ. பிரியங்கா சிரித்துக் கொண்டே ராஜூ சொன்னதை ரசித்தார். மொத்த ஹவுஸ்மேட்ஸூம் ஒன்ஸ்மோர் கேட்கும் அளவுக்கு இருந்தது ராஜூவின் ஸ்டாண்டப் காமெடி. இதில் பாவனி பற்றி ராஜூ சொன்ன ஒரு கமெண்ட் கடைசியில் சண்டையில் முடிந்தது. பாவனி அதைப்பற்றி விளக்கம் கேட்டார். ராஜூவும் அதற்கு பதில் கொடுத்தார். இந்த வீட்டுக்கு வந்த நாள் முதலே பாவனி vs ராஜூ, பாவனி vs அக்‌ஷரா தீராத பிரச்சனையாக ஓடிக் கொண்டருக்கிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: