• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss 5 : அக்‌ஷரா மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டை வைக்கும் சிபி!

Bigg Boss 5 : அக்‌ஷரா மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டை வைக்கும் சிபி!

பிக் பாஸ் சிபி

பிக் பாஸ் சிபி

செண்பகமே செண்பகமே டாஸ்கில், அக்ஷ்ராவும் இப்படி தானே செய்தார், அது தப்பு இல்லை என்றால் இதுவும் தப்பு இல்லை என்கிறார் சிபி.

  • Share this:
    பிக் பாஸ் 5 மூன்றாவது ப்ரோமோவில், நேற்றைய சம்பவம் குறித்து சிபி, நிரூப் மற்றும் இமான் அண்ணாச்சி கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசி கொண்டிருக்கின்றனர்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க் வழங்கப்பட்டது. "நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை" என்ற பெயரில் நடந்த இந்த டாஸ்கில், போட்டியாளர்கள் அவர்களுக்காக விளையாடாமல் மற்றவர்கள் வெற்றிக்காக விளையாட வேண்டும் என கூறப்பட்டது. ஒவ்வொரு போட்டியாளர் குறிக்கும் வகையில் ஒவ்வொரு பொம்மை கார்டனில் வைக்கப்பட்டு இருக்கும். மணி அடித்ததும் போட்டியாளர்கள் அவர்களுடைய பொம்மையை விட்டுவிட்டு மற்றவர்கள் யாராவது ஒருவருடைய பொம்மையை தூக்கிக்கொண்டு ஓடிச்சென்று அருகே அமைக்கப்பட்டுள்ள கூடாரத்திற்குள் செல்ல வேண்டும்.

    இதில் கடைசியாக வரும் போட்டியாளர் கையில் இருக்கும் பொம்மையில் குறிப்பிட்டிருக்கும் நபர் வெளியேற வேண்டும் என கூறப்பட்டது. மேலும் போட்டியாளர்கள் மற்றவரின் பொம்மையை எடுக்காமல், தனது பெயர் இருக்கும் பொம்மையை எடுத்தால் அவர் போட்டியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்த போட்டியில் நேற்று அனைவரும் ஒவ்வொரு பொம்மையை எடுத்து கொண்டு ஓடிய போது அக்ஷ்ராவை, நிரூப் கூடாரத்திற்குள் செல்ல விடமால் பிடித்து கொண்டார். எனினும் ஒருவழியாக அக்ஷ்ரா அதனை மீறி உள்ளே சென்று விட்டார்.

    முழுசா சந்திரமுகியா மாறுன அக்‌ஷரா... பீப் போட வைத்த நிரூப் - வருணின் சண்டைகள்!

    இந்த சுற்றில் ராஜு இறுதியாக வந்த நிலையில் அவரிடம் இருந்த பொம்மையில் சிபி பெயர் இருந்ததால் அவர் வெளியேற்றப்பட்டார். இதனிடையே அக்ஷ்ராவின் கையில் வருண் பொம்மை இருந்ததால் தான் அதனை நிரூப் தடுத்தார் என பிரச்னை ஏற்பட்டது. அப்போது அக்ஷ்ரா, நீ என்னை தடுத்தது தப்பு அல்ல ஆனால் ஓட விடாமல் பிடித்து கொண்டால் எப்படி செல்ல முடியும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது நிரூப், இது கேம் இப்படி தான் விளையாட முடியும் என விளக்கம் கொடுத்த நிலையில் இடையே குறுக்கிட்ட வருண், ஒரு பெண்ணை இப்படி பிடித்து விளையாடுகிறாயே? அசிங்கமாக இலையா? என மிகவும் கோபமாக கேட்டார்.

    மேலும் நான் ஜாலியாக தான் விளையாடினேன், நீ இப்படி அசிங்கமாக விளையாடினால் நானும் அப்படி தான் விளையாடுவேன் என வருண் ஆக்ரோஷமாக பேசினார். இதனை தொடர்ந்து நிரூபிற்கு ஆதரவாக பேசிய சிபி, செண்பகமே செண்பகமே டாஸ்கில், அக்ஷ்ராவும் இப்படி தானே செய்தார், அது தப்பு இல்லை என்றால் இதுவும் தப்பு இல்லை என்கிறார். இந்த பிரச்னையில் ஒருவருக்கொருவர் கெட்ட வார்த்தை பேசியதால் அடிக்கடி பீப் ஒலி ஒலித்தது.



    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், நேற்றைய சம்பவம் குறித்து சிபி, நிரூப் மற்றும் இமான் அண்ணாச்சி கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது அக்ஷ்ரா மீது என எந்த கோபமும் இல்லை, அவர் கூறிய கருத்திற்கு எதிராக அவரே செயல்பட்டார். மேலும் ஒரு பொம்பளையை இப்படி பிடித்து கொண்டதாக வருண் கூறினான், எனக்கு குத்துசண்டை தெரியும் முடிந்தால் வந்து பாருங்கள் என பேசினான், இதுவே வேறு யாராவது இப்படி பேசினால் அவனுக்கு எப்படி கோபம் வரும் என சிபி கூறுகிறார். அதற்கு நிரூப், நான் அக்ஷ்ராவுடன் கேட்டேன் உன்னை நான் தவறான எண்ணத்தில் பிடித்தேனா? தப்பான இடத்தில் தொட்டேனா? என கேட்டேன் அதற்கு அக்ஷ்ரா இல்லை என கூறிவிட்டார். நான் எந்த தவறும் செய்யவில்லை என கூறும் காட்சிகள் உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: