பிக் பாஸ் பாவ்னி ரெட்டியின் இன்ஸ்டாகிராம் புகைப்படம் இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. அதுவும் பாவ்னி தனது காதலை குறிப்பிடும் படியான இந்த போஸ்ட் பெரிய விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் பிறந்த பாவ்னிக்கு தற்போது 33 வயதாகிறது.இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒருசில சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால் பிக் பாஸ் 5க்கு பிறகு பாவ்னிக்கு மிகப் பெரிய அளவில் ரசிகர் பட்டாளமும், ஆர்மிகளும் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 5 ஜனவரி 16-ஆம் தேதி வெற்றிக்கரமாக முடிந்தது. இதில் இசை வாணி, ராஜு, மதுமிதா, பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா, திருநங்கை நமிதா மாரிமுத்து, மலேசிய தமிழ் பெண் நாடியா சாங், விஜய் டிவி-யின் பிரபல ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே, மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் - சாவித்திரி ஆகியோரது பேரன் அபிநய், அக்ஷரா, ஐசரி வருண், இமான் அண்ணாச்சி, தாமரைச் செல்வி, ஸ்ருதி, பாவ்னி ரெட்டி, நிரூப், ஐக்கி, சிபி, சின்னப்பொண்ணு உள்ளிட்ட 18 பேர் நேரடி போட்டியாளர்களாக இருந்தார்கள்.
மீண்டும் சன் டிவியில் சீரியலை இயக்க போகும் ’மெட்டி ஒலி’ கோபி!
இதில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த அமீரின் வருகைக்கு பின்பு பாவ்னி மீது மொத்த கேமராவும் ஃபோக்கஸ் செய்ய தொடங்கியது. ஷோவில் காதல் ட்ராக் ஆரம்பமானது. அதுவும் ஒன் சைடு லவ். பாவ்னியை காதலிப்பதாக அமீர் சொல்ல பாவ்னிக்கும் அமீருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. ஃபைனல்ஸ் வரை இருவரும் ஒன்றாகவே இருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பும் எல்லா பேட்டிகளிலும் அமீர் பாவ்னியை காதலிப்பது நிஜம் என்றே கூறி வந்தார். சோஷியல் மீடியாவில் இவர்களின் ஜோடி பொருத்தம் சூப்பர் என்று ஒரு கூட்டம் கொண்டாடி வருகிறது.
இந்த ஜோடிக்கு கிடைத்த ரீச்சை வைத்து பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் இருவரையும் ஜோடியாக களம் இறக்கியது விஜய் டிவி. இருவரும் நடனத்தில் கலக்கி கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லை மேலும் இருவருவரின் நெருக்கம் அதிகமாகி வருகிறது. ஷோவில் பிரியங்காவும் ராஜூவும் அமீரை , பாவ்னியை வச்சி பயங்கரமாக கலாய்கின்றனர். போன வார எபிசோடில் பாவ்னி, எனக்கு அமீரை பிரிக்கும் என ஓப்பனாக கூறி இருந்தார். அவர் காதலை ஏற்றுக் கொள்ள டைம் வேண்டும் எனவும் அவர் கூறி இருந்தார்.
புகழின் உச்சத்தில் பிக் பாஸ் தாமரை… ஷாப்பிங் போன இடத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்!
இதனால் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவ தொடங்கிவிட்டன. இப்படி இருக்கையில் பாவ்னி தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அதன் மூலம் வதந்தியை இன்னும் பெரிதாக்கியுள்ளார். கேன்டில் லைட் டின்னரில் ரொமாண்டிக் மோடில் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கும் பாவ்னி, ’காதலை உணர்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்படி என்றால் பாவ்னி நீங்கள் யாரையோ காதலிக்கிறீர்கள்? யார் அது? அமீர் தானே? என வழக்கம் போல் ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர். பாவ்னி உண்மையை சொன்னால் மட்டுமே அது யார் என்பது தெரிய வரும். அதே போல் இந்த கேப்ஷனுக்கு ’உண்மை’ என்று சூப்பர் சிங்கர் ஆங்கர் பிரியங்கா கமெண்ட் செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.