• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • BIGGBOSS : நிரூப்புக்கு கமலிடம் இருந்து கிடைப்பது பாராட்டா? பாடமா?

BIGGBOSS : நிரூப்புக்கு கமலிடம் இருந்து கிடைப்பது பாராட்டா? பாடமா?

பிக் பாஸ்

பிக் பாஸ்

நிரூப் விளையாடிய விதம் யாருக்கெல்லாம் பிடிக்கவில்லை என்று பிக்பாஸ் போட்டியாளர்களை பார்த்து கேட்கிறார் கமல்ஹாசன்.

 • Share this:
  பிக்பாஸ் சீசன் 5 இரண்டாவது புரமோவில் கமல்ஹாசன் யாரை வறுத்தெடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

  பிக்பாஸ் சீசன் ஐந்தில் 41ம் நாளான இன்று நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுடன் இந்த வாரம் முழுக்க நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து உரையாடும் நிகழ்வு நடைபெறுகிறது. இது தொடர்பாக, தற்போது 2 ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளன. முதல் ப்ரோமோவில் நடிகர் கமல்ஹாசன் "நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை" டாஸ்கில் நடந்த சண்டை குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார்.

  அவ்வாறு 41ம் நாளான இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் அவர் பேசியதாவது, " வெளியே புயலும் மழையும் ஓய்ந்த சாயல் தெரிகிறது. வீட்டிற்குள் புயல் சின்னங்கள் உருவாகியிருக்கின்றன. பொம்மைகளை வைத்து விளையாடச் சொன்ன ஒரே காரணத்திற்காக, இவ்வளவு குழந்தைத் தனமாக மாறவேண்டியதில்லை. இப்பொழுது இவர்களுடைய விளையாட்டு மல்யுத்தத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. எது எல்லை? எது வரம்பு என்பதை இவர்களுக்கு சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். அதைச் செய்வோம் இன்று" என பேசியுள்ளார்.

  அப்படியானால், இன்று ஒரு சம்பவம் காத்திருக்கிறது. கமல்ஹாசன் யாரை வறுத்தெடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், இன்றைய தினத்தின் 2வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் கண்டஸ்டண்டுகளுடன் உரையாடிய நடிகர் கமல், " இந்த பிக்பாஸ் ஹவுஸ்ல நடக்குறது எல்லாம் ஸ்க்ரிப்டட் ப்பா.. என்று சொல்பவர்களுக்கு, அது இல்லை என்பதை ஒவ்வொரு சீசன்களிலும் விளையாடும் கண்டஸ்டண்ட்ஸ்களே நிரூபித்து காட்டி வருகின்றனர்" என்று கமல் கூறுவது போல ஆரம்பமாகிறது ப்ரோமோ. இதனை தொடர்ந்து பேசிய கமல்ஹாசன் நிரூப் விளையாடிய விதம் யாருக்கு பிடிக்கவில்லை என்று பிக்பாஸ் போட்டியாளர்களை பார்த்து கேட்கிறார்.  உடனே, அதற்கு பதிலளிக்கும் வருண், "டார்கெட் பண்ணி என்ன முடிச்சிரணும்என்று பார்த்தான்" எனக் கூறுகிறார். உடனே பிரியங்காவும் தன்னுடைய கருத்தை பதிவிடுவது போல காட்சிகள் அமைந்தன. அடுத்து அக்சரா பேசும்போது நிரூப் விளையாட்டு பிடிக்கலை என்று சொல்ல முடியாது என்று பதிலளித்தார். உடனே உலகநாயகன் நிரூப் விளையாட்டு யாருக்கு பிடித்திருந்தது என கேட்க, அதற்கு பதிலளித்த ராஜு " எனக்கு இன்டெரெஸ்ட்டிங் ஆ இருந்தது" என்று பதிலளிக்கிறார். உடனே பேசிய நடிகர் கமல்ஹாசன் "இந்த ஸ்க்ரிப்டட் என்பது என்னவென்றால் அவ்வப்போது நீங்களே மாற்றி எழுதிக்கொள்ளலாம். இந்த மாற்றி எழுதும் வேலையை நிரூப் செய்திருக்கிறார்" என்று பேசியுள்ளார். ஆக மொத்தத்தில் ப்ரோமோவை வைத்து பார்க்கும்போது நிரூப் கமல்ஹாசனிடம் இருந்து பாராட்டுகளையே பெற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அக்ஷ்ரா, அபினய், இமான், ராஜு, பாவனி, மதுமிதா, சிபி ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: