Home /News /entertainment /

விஜய் டிவி போட்ட குறும்படம்.. பொய் என அடித்து பேசும் பிக் பாஸ் பாவ்னி!

விஜய் டிவி போட்ட குறும்படம்.. பொய் என அடித்து பேசும் பிக் பாஸ் பாவ்னி!

பிக் பாஸ் பாவ்னி

பிக் பாஸ் பாவ்னி

பிக் பாஸ் வீட்டிலேயே தனக்கு அபிநையை பிடிக்காது என்று அமீரிடம் கூறியிருந்தார். அந்தக் குறும்படம் பாவனி மீதும் தவறு உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டியது.

  பிக் பாஸ் சீசன் 5 முடிந்து கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது மட்டுமின்றி, நிகழ்ச்சியில் இறுதி வரை வந்த டாப் 5 போட்டியாளர்கள் நிகழ்ச்சி முடிந்தவுடன் மீடியாவில் பேட்டி  மற்றும் ரசிகர்களை சமூக வலைத்தளங்கள் வழியே லைவவாக சந்தித்து உரையாடுவது வழக்கம். இந்த சீசனின் மூன்றாவது இடத்தைப் பெற்ற பாவ்னி சமீபத்தில் லைவ் வீடியோவில் சர்ச்சையைக் கிளப்பும்படி பேசியுள்ளார். அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

  பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்த போது, பாவ்னி மற்றும் அபிநய் பற்றி பலரும் பல விதமாக பேசி, தொகுப்பாளர் கமல்ஹாசன் பஞ்சாயத்து செய்யும் வரை பிரச்சனை பெரிசானது. இதில் யார் தரப்பில் தவறு, யார் கூறியது சரி என்றெல்லாம் விவாதங்கள் பெரிய அளவில் எழுந்தன. அபிநய்யை தனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை என்று பாவ்னி பிக் பாஸ் வீட்டிலேயே பல இடங்களில் கூறியுள்ளார். ஆனால், அமீர் பாவ்னியுடன் நெருக்கமாகும் வரை, அபிநயுடனே பெரும்பாலும் நேரம் செலவழித்துள்ளார்.

  இதையும் படிங்க.. டெலிகாஸ்ட் ஆன முதல் எபிசோடு சர்ச்சையில் சிக்கியது! குக் வித் கோமாளி சீசன் 3ல் என்ன நடந்தது?

  ட்ரூத் ஆர் டேர் டாஸ்க்கில் ராஜூ அபிநையிடம், ‘நீங்கள் பாவ்னியை லவ் பண்றீங்களா’ என்று கேட்டது சர்ச்சையை கிளப்பியது. அதற்கு அபிநை வழக்கம் போல  சரியாக பதில் சொல்லவில்லை. பாவ்னி யாரைக் காதலிப்பதாக இருந்தாலும் அது அவரின் உரிமை, அதை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று கமல் ,பாவ்னி மற்றும் அபிநை பற்றிய பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார். சர்ச்சைக்குள்ளான இவர்களைப் பற்றி வார இறுதி எபிசோடுகளில் பேச்சு வரும் போது, யார் மீது தவறு உள்ளது என்பதை தெளிவுபடுத்த கமல்ஹாசன் குறும்படம் போட்டுக் காட்டினார். அதில் பாவ்னி பிக் பாஸ் வீட்டிலேயே தனக்கு அபிநையை பிடிக்காது என்று அமீரிடம் கூறியிருந்தார். அந்தக் குறும்படம் பாவ்னி மீதும் தவறு உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டியது.

  இதையும் படிங்க.. சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்… வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்கிறார்!

  தற்போது, ரசிகர்களுடன் பேசிய பாவ்னியிடம் குறும்படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. பாவ்னிஅந்தக் குறும்படம் தவறு, நான் அபிநை பற்றி அப்படி சொல்லவே இல்லை என்று பேசும் வீடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ‘நான் அபிநையை பிடிக்காதுன்னு சொல்லல, ஆரம்பத்துல பிடிக்காதுன்னு தான் சொன்னேன். ஆனா, விஜய் டிவி குறும்படம் காட்டும் போது அதை எடிட் பண்ணி போட்டுட்டாங்க’ என்று பாவனி கூறும் வீடியோ பதிவின் லிங்க் இங்கே.  இதைப் பார்க்கும் போது, சீசன் 1 இல் ஜூலியின் அந்த அஞ்சு செக்கண்ட் வீடியோ நினைவில் வருவதை தவிர்க்கவே முடியாது. ஜூலி போலவே, பேசாத ஒன்றை, இல்லாத வீடியோவைப் பற்றி பாவ்னி பேசுகிறாரா என்று தெரியவில்லை. அதே போல, ரசிகர்களும் பாவ்னிக்கு ஆதரவாகவும்,பாவ்னி எப்போதுமே இப்படித்தான் மாற்றி மாற்றி பேசுவார் என்று அவரை கிண்டல் செய்தும் கமென்ட் செய்து வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

  அடுத்த செய்தி