ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் கேமை சரியாக விளையாடுபவர்கள் யார்? டைட்டில் வின்னர் வாய்ப்பு யாருக்கு அதிகம்?

பிக் பாஸ் கேமை சரியாக விளையாடுபவர்கள் யார்? டைட்டில் வின்னர் வாய்ப்பு யாருக்கு அதிகம்?

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டனர். வெளியில் ரசிகர்களிடம் ஸ்கோர் செய்து விட்டனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் சீசன் 51 நாட்களை கடந்து வெற்றிக்கரமாக பயணித்து கொண்டிருக்கிறது. நேற்றைய 51 எபிசோடை வைத்து பார்க்கும் போது இதுவரை 11 போட்டியாளர்கள் பயணித்து வந்த பாதையை பொறுத்து யார் பிக் பாஸ் கேமை சரியாக விளையாடுகிறார்கள் என ஓரளவுக்கு கணிக்க முடிகிறது. இவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டனர். வெளியில் ரசிகர்களிடம் ஸ்கோர் செய்து விட்டனர். இவர்கள் டைட்டில் வின்னர் ஆக கூட வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் கூவ தொடங்கிவிட்டனர். யார் அவர்கள்?

  நேற்றைய எபிசோடில் டான்ஸ் மாஸ்டர் அமீரின் வைல்டு கார்டு என்ட்ரி இருந்தது. அதுமட்டுமில்லை பள்ளி பருவத்திற்கு அழைத்து செல்லும் கனா காணும் காலங்கள் டாஸ்க்கும் தொடங்கியது. முந்தைய நாள் தொடங்கப்பட்ட டான்ஸ் டாஸ்க் நேற்றும் தொடர, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வருண் - அக்‌ஷரா டான்ஸ் நிகழ்ந்தது அக்‌ஷராவுக்கு டான்ஸ் ஆட தெரியாது என்பது மார்னிங் வேக்கப் டான்ஸில் நமக்கு தெரியும். இருந்தாலும் நான் ஆட வச்சி காட்டுறேண்டா என தைரியமாக இறங்கி அதை ஒரளவுக்கு செய்தும் காட்டினார் வருண். ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது.

  பிரபுதேவா வெறியனான டான்ஸ் மாஸ்டர் அமீர்,  சர்பிரைஸாக உள்ளே நுழைந்தார். யாருப்பா நீ? என்பது போலவே ஹவுஸ்மேட்ஸின் ரியாக்‌ஷன் இருந்தது.  அடுத்தது கனா காணும் காலங்கள் டாஸ்க் தொடங்கியது. சிபியும் ராஜுவும் வேற லவலில் இறங்கி விளையாடி வருகின்றனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரியங்கா சறுக்க்கினார். அபிஷேக் ராசி பிரியங்காவை மீண்டும் பழைய நிலைக்கு தள்ளிவிட்டது. இணையதளத்திலும் பிரியங்காவை பலரும் வசப்பாடுவதை பார்க்க முடிகிறது. டாஸ்கை சுவாரசியம் இல்லாமல் ஆக்கியது பிரியங்கா தான். தன்னுடைய ரோலை ராஜூவும் சிபியும் சரிவர கையாள்வதால் இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

  அதே போல் இந்த டாஸ்கில் அக்‌ஷராவின் முகமூடியும் ஓரளவு கிழியும் என நம்ப முடிகிறது. ரசிகர்கள் மத்தியில் ஏஞ்சலாக சுற்றி வந்த அக்‌ஷரா, இப்போது ராட்சசி ஆகிவிட்டார். காரணம், அவரின் அழகான கலரிங் முடியை சிபி பிளாக் ஆக்கிவிட்டார். இதனால் பொறுமை இழந்த அக்‌ஷரா பயங்கரமாக தனது முகத்தை மாற்றிக் கொண்டார். இதன் பிரதிபலிப்பு இன்றைய 2 புரமோவிலும் பார்க்க முடிகிறது. அபிக்கு சனி வாயில் நாட்டியம் ஆடுகிறது. ஆல் ரவுண்டர் வருணும் நிரூப்பும் அமைதியோ அமைதி அமைதிக்கெல்லாம் அமைதியாக சுற்றி வந்தார்கள். பேசும் பொருளான தாமரை யாரையாவது சண்டைக்கு இழுக்கலாமா? கண்டெண்ட் கொடுக்கலாமான்னு யோசித்து கொண்டிருந்தார். பிரியங்கா போல் ரசிகர்கள் ஒன்றும் அவ்வளவு லேஸ் பட்டவர்கள் கிடையாது தாமரை யாரு,. எப்படின்னு எப்போதோ கணித்துவிட்டார்கள்.

  சோ ,தாமரை பிக் பாஸ் கேமுக்கு தான் தேவை. ரசிகரகளுக்கு இல்லை. நேற்றைய எபிசோடை வைத்து பார்க்கும் போது இந்த பிக் பாஸ் கேமை மிகச் சரியாக புரிந்து கொண்டு இ்றங்கி விளையாடுபவர்கள் என்று பார்த்தால் ராஜூ, சிபி, நிரூப், தாமரை மட்டும் தான். மற்ற எல்லோரும் வருவார்கள். ஆனால் இறுதி நாள் வரை செல்வார்களா என்றால் சந்தேகம் தான். இதில் பிரியங்காவை மிஸ் பண்ண முடியாது. அபிஷேக் அடுத்த வார ம் வெளியே போனால் பிரியங்காவுக்கு இந்த லிஸ்டில் இடம் கிடைக்கும். இல்லையெனில் கொஞ்சம் கஷ்டம் தான். இது நம்முடைய கணிப்பு மட்டும் தான் ஆனால் பிக் பாஸ் பிளான் எப்படியோ?

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 5, Vijay tv