Home /News /entertainment /

bigg boss 5 finale : இன்று பிரம்மாண்டமான பிக் பாஸ் ஃபினாலே நிகழ்ச்சி.. எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

bigg boss 5 finale : இன்று பிரம்மாண்டமான பிக் பாஸ் ஃபினாலே நிகழ்ச்சி.. எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

பிக் பாஸ் 5 ஃபினாலே

பிக் பாஸ் 5 ஃபினாலே

bigg boss 5 : சீசன் 5ன் போட்டியாளர்களான இமான் அண்ணாச்சி, அபிஷேக், மற்றும் மதுமிதா ஆகியோர் இறுதிப் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது. 18 போட்டியாளர்கள் உடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், 2 போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்து, இப்போது ஒருவர் தான் டைட்டில் வின்னர் என்று நிறையவடையப் போகிறது. இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பது இன்று ஒளிப்பரப்பாகும் இறுதி நிகழ்ச்சியில் (bigg boss 5 finale) தெரிந்து விடும். பிக் பாஸ் வீட்டில் இது இறுதி வாரம் என்பதால், பொங்கல் கொண்டாட்டமும் சேர்ந்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என களைக்கட்டியது. அதற்கு மகுடம் வைக்கும் விதமாக, இறுதிப்போட்டி வழக்கம் போல பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

    உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் தான் பிக் பாஸ் சீசன் 5 ன் வெற்றியாளரா என்று கமல் உற்சாமாக கேட்கும் காட்சிகள் புரமோவில் இடம் பெற்றன.  பிக் பாஸ் இறுதிப்போட்டிக்கான ஷூட்டிங் நேற்றே தொடங்கப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக, நேற்று  வெளியான முதல் புரோமோவில் இறுதிப்போட்டியில் இடம் பெறக் கூடிய காட்சிகள் இருந்தன.

    இதையும் படிங்க.. பிக் பாஸ் பிரியங்காவுக்கு என்ன ஆச்சு? பாதியில் போனதால் பைனல்ஸுக்கு வருவாரா? குழப்பத்தில் ரசிகர்கள்!

    வழக்கமாக லைவ்வாக ஒளிபரப்பாகும் ஃபினாலே நிகழ்ச்சி, இந்த முறை ஒரு நாள் முன்னதாகவே படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட இருக்கிறது. கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் நிலையில், அனைவரின் நலன் கருதி விரைவாக ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டிருக்கலாம்.

    read more.. பிக் பாஸ் பாவ்னிக்கு வருண் கொடுத்த ஷாக்

    ராஜூ, பிரியங்கா, பாவ்னி, நிரூப், அமீர் ஆகியோர் ஃபைனல்ஸிட்டாக தேர்வாகியுள்ளனர். இதில் ராஜூ மற்றும் பிரியங்கா முதல் 2 இடங்களை பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ராஜூ தான் வெற்றி பெற அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல்கள் உலா வந்த வண்ணம் உள்ளன. இந்த சீசனின் தீம்  ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்று சீசனின் ஆரம்பத்தில் கூறிய கமல், இறுதிப் போட்டியிலும் அதையே கூறுகிறார். எனவே, டைட்டில் வின்னர் யார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    பிக் பாஸ் ஃபினாலே புரோமோ இங்கே:



    இந்த புரோமோவில் உள்ள காட்சிகளின் படி, சீசன் 5ன் போட்டியாளர்களான இமான் அண்ணாச்சி, அபிஷேக், மற்றும் மதுமிதா ஆகியோர் இறுதிப் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.

    பிக் பாஸ் சீசன் 5 இன் இறுதிப்போட்டி இன்று மாலை 6.30 மணி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி