முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே போவது யார்? வெளியான தகவல்!

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே போவது யார்? வெளியான தகவல்!

பிக்பாஸ்

பிக்பாஸ்

இதில் போட்டி துவங்கியதிலிருந்தே சிறப்பாக செயல்படவில்லை என்று கமலால் சுட்டிக்காட்டப்பட்டவர் அபினய்

  • Last Updated :

இந்த வாரம் பிக்பாஸிலிருந்து யார் வெளியேற்றப்படலாம்?  என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் பிரமாண்ட ரியாலிட்டி ஷோவான ஸ்டார் விஜய் டிவி-யின் பிக்பாஸின் சீசன் 5 வெற்றிகரமாக 5 வாரங்களை நிறைவு செய்ய இருக்கிறது. வழக்கம் போல இந்த சீசனையும் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த அக்டோபர் 3ம் தேதி துவங்கிய பிக்பாஸ் சீசன் 5, மொத்தமாக 18 போட்டியாளர்களுடன் துவங்கியது.

சீசன் 5 துவங்கிய போது இசை வாணி, ராஜு, மதுமிதா, பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா, திருநங்கை நமிதா மாரிமுத்து, மலேசிய தமிழ் பெண் நாடியா சாங், விஜய் டிவி-யின் பிரபல ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே, மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் - சாவித்திரி ஆகியோரது பேரன் அபிநய், அக்‌ஷரா, ஐசரி வருண், இமான் அண்ணாச்சி, தாமரைச் செல்வி, ஸ்ருதி, பாவனி ரெட்டி, நிரூப், ஐக்கி, சிபி, சின்னப்பொண்ணு உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டினுள் இருந்தார்கள். எலிமினேஷன் ஆரம்பிப்பதற்கு முன்பே திருநங்கை நமிதா மாரிமுத்து திடீரென்று தானாகவே போட்டியிலிருந்து வெளியேறினார். இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கான உரிய காரணம் பற்றிய உண்மை தகவல் இதுவரை வெளியாகவில்லை.

எலிமினேஷன் துவங்கியவுடன் முதல ஆளாக மலேசிய தமிழ் பெண்ணான நாடியா சாங் வெளியேற்றப்பட்டார். இவரை தொடர்ந்து சினிமா விமர்சகரும், பிரபல யூடியூபருமான அபிஷேக் ராஜாவும், சமீபத்தில் சின்னபொண்ணும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். தற்போது 14 போட்டியாளர்கள் பிக்பாஸில் தொடர்ந்து விளையாடி வரும் நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் அபிநய், இசை வாணி , ஐக்கி, மதுமிதா, சிபி, அக்ஷரா, பாவனி, சுருதி மற்றும் நிரூப் ஆகியோர் அடங்குவர்.

இதில் போட்டி துவங்கியதிலிருந்தே சிறப்பாக செயல்படவில்லை என்று கமலால் சுட்டிக்காட்டப்பட்ட அபினய் வெளியேற்றப்படலாம் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இதை உறுதி செய்வது போல அபினய் மற்றும் சுருதி ஆகியோர் நாமினேஷனில் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதாகவும், எனவே இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜெர்மனி மாடல் டூ பிக் பாஸ் நிகழ்ச்சி.. தமிழ் ரசிகர்களுக்கு ஏஞ்சலாக மாறிய மதுமிதா ரகுநாதன்!

நாமினேஷன் பட்டியலில் பாவனி, சிபி, நிரூப் ஆகியோர் முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த வார இறுதி எபிசோடில், கமல்ஹாசன் தாமரையின் நாணயத்தைத் திருடியதற்காக சுருதி மற்றும் பாவனியிடம் கேள்வி எழுப்பி சில நெறிமுறைகளுடன் டாஸ்க்குளை விளையாடும் படி கேட்டுக் கொண்டார். அதே சமயம் அபினயிடம் உங்களது கூட்டை விட்டு வெளியேறி வந்து கேமை விளையாடுங்கள் என்று கமல் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Bigg Boss Tamil 5, Vijay tv