விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்கி 75 நாட்களை கடந்து சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 4 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட காரணங்களுக்கான நமீதா மாரிமுத்து இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் வாரத்தில் குறைந்த வாக்குகள் பெற்றதால் நாடியா வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து பிரபல யூடியூபரான அபிஷேக் ராஜா இரண்டாவது நபராக வெளியேற்றப்பட்டார். பின்னர் சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி ஆகியோர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விஜய் டிவியில் இன்று ஒருநாள் நிறுத்தப்படும் சீரியல்கள்.. என்ன காரணம்?
இதனிடையே முதல் வைல்டு கார்டு எண்ட்ரியாக அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வருகை தந்தார். இவரை தொடர்ந்து சஞ்சீவ் மற்றும் அமீர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தனர். ஆனால் அபிஷேக் ராஜா வந்த இரண்டாவது வாரத்திலேயே மீண்டும் வெளியேற்றப்பட்டார். இதனால் தற்போது இந்த நிகழ்ச்சியில் ராஜு ஜெயமோகன், பிரியங்கா, அபிநய் வாடி, பாவ்னி, வருண், அக்ஷரா, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 11 போட்டியாளர்கள் உள்ளனர்.
இந்த வாரம் இவர்கள் 11 பேருமே நாமினேஷனில் இருப்பதாக பிக் பாஸ் அதிரடியாக அறிவித்தார். ஆனால் இந்த நாமினேஷன் பட்டியலில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள தினமும் டாஸ்குகள் வழங்கப்படும். அதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷனில் இருந்து விலகுவார்கள் என கூறப்பட்டு, அதன்படி இந்தவாரம் முழுவதும் பல்வேறு டாஸ்குகள் வழங்கப்பட்டது. இதில் சிபி, நிரூப், தாமரை, சஞ்சீவ், அமீர் ஆகியோர் வெற்றி பெற்று தங்களை நாமினேஷனில் இருந்து காப்பாற்றிக்கொண்ட நிலையில், மீதமுள்ள 6 பேர் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.
ஒரு காலத்துல எப்படி இருந்த கதை.. இப்ப நிஷாவை நம்பி பாரதி கண்ணம்மா சீரியல்!
இவர்களில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ள நிலையில் இந்தவாரம் டபுள் எவிக்சன் இருக்க வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. மேலும் அதில் அபிநய் வெளியேறுவது உறுதி என்ற தகவலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த பெரும்பாலான வாரங்களில் நாமினேட் ஆகியுள்ள அபிநய் கடைசி நபராக காப்பாற்றப்பட்டு வந்தார்.
கடந்த வாரம் அபிநய், பாவ்னியிடம் தவறாக பழகுவதாக பிரச்சனை எழுந்த நிலையில் நாளை அவர் வெளியேறுவார் என கூறப்படுகிறது. மேலும் அபிநய் கடந்த வாரமே வெளியே செல்ல வேண்டியது, ஆனால் அவரை விஜய் டிவியின் காப்பாற்றி வைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil 5, TV show, Vijay tv