ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Bigg Boss : மரியாதையாக பேசுங்கள்.. அக்‌ஷராவுக்கு வார்னிங் கொடுத்த பிரியங்கா!

Bigg Boss : மரியாதையாக பேசுங்கள்.. அக்‌ஷராவுக்கு வார்னிங் கொடுத்த பிரியங்கா!

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிரியங்கா, தமிழில் பேசுங்கள் என்கிறார். அதற்கு அக்‌ஷரா பே என கூற கடுப்பான பிரியங்கா, மரியாதையாக பேசும்படி கூறுகிறார்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது வெற்றிகரமாக 10 வாரங்களை நிறைவு செய்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரந்தோறும் நாமினேஷன் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த வாரம் தற்போது உள்ள 11 பேரும் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இருப்பதாக பிக் பாஸ் அறிவித்தார்.

  ஆனால் இந்த நாமினேஷன் பட்டியலில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள தினமும் டாஸ்குகள் வழங்கப்படும். அதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷனில் இருந்து விலகுவார்கள் என கூறப்பட்டுள்ளது. அதன்படி நடந்த முதல் டாஸ்கில் ஒன்று முதல் பத்து வரை தங்களை ரேங்கிங் அடிப்படையில் வரிசைப்படுத்திக் கொள்ள பிக் பாஸ் டாஸ்க் வைத்தார். பல கட்ட கடுமையான விவாதங்களுக்குப் பிறகு, அசராமல் முதல் இடத்தில் நின்று சிபி வெற்றி பெற்ற நிலையில், சிபிக்கு எலிமினேஷன் பட்டியலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

  இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற டாஸ்கில் கார்டன் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு பேருந்தில் சிபியைத் தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஏற வேண்டும். தண்ணீர் மட்டுமே எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது. உள்ளே போட்டியாளர்களுக்கு பல இடையூறுகள் செய்யப்படும், அதிலிருந்து யாராவது இறங்கினால் அவுட். மேலும் ஒவ்வொரு முறை ‘ஹார்ன் சத்தம்’ வந்ததும் ஹவுஸ் மேட்ஸ் ஒருவர் இறங்க வேண்டும். ‘யார் இறங்குவது என்பதை போட்டியாளர்கள் கலந்து பேசலாம்’ , கடைசியாக இருக்கும் ஒருவர் வெற்றியாளர் என பிக் பாஸ் அறிவித்தார்.

  அதன்படி பேருந்தில் தண்ணீர், புகை என ஒவ்வொரு தொந்தராவாக கொடுக்கப்பட்டது. தண்ணீரில் சில கெமிக்கல் கலந்தும் கொடுத்தனர். இதனால் பஸ்ஸில் இருந்தவர்கள் முகம் சுளித்து மூக்கை பொத்திக் கொண்டு வாந்தி எடுக்கும் நிலைக்கே சென்றனர். இந்த டாஸ்கில் முதலில் ராஜு, பின்னர் சஞ்சீவ், அக்ஷ்ரா, பாவ்னி, பிரியங்கா, வருண், தாமரை, அபிநய், அமீர் என அடுத்தடுத்து இறங்க நிரூப் இறுதியாக வெற்றி பெற்று நாமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆகினார்.

  ' isDesktop="true" id="640243" youtubeid="uAaZjv5SuII" category="television">

  தற்போது நாமினேஷன் லிஸ்டில் பிரியங்கா, ராஜூ, வருண், அக்ஷரா, தாமரை, அமீர், சஞ்சீவ், பாவனி, அபினய் ஆகிய 9 பேர் உள்ள நிலையில் இவர்களுக்கு ஒரு வித்தியாசமான டாஸ்க் வழங்கப்படும் காட்சிகள் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இருந்தது. அதில், தாய கட்டையில் ஹவுஸ்மேட்ஸின் புகைப்படம் இடம் பெற்று இருக்கும். 3 பஸ்ஸர் அடித்த பின்பு அதில் யாருடைய முகம் மேலே இருக்கிறதோ அவர் போட்டியில் இருந்து விலக்கப்படுவார் என பிக் பாஸ் அறிவிக்கிறார். அதன்படி அனைவரும் டாஸ்கை விளையாடி வருகின்றனர். அப்போது ராஜூ தாயக் கட்டை மீது ஏறி அமர்ந்து கொள்கிறார். அதில் அக்ஷ்ரா முகம் மேலே இருப்பதால் கடுப்பான அவர், நீ இப்படி அமர்ந்து கொண்டால் எப்படி விளையாட முடியும்? என கேட்கிறார். அதற்கு ராஜு, ”நீ விளையாட வேண்டாம் சும்மா இரு” என நக்கலாக சொல்ல, உடனே அக்‌ஷரா கோபித்து கொண்டு செல்லும் காட்சிகள் உள்ளது.

  இந்தநிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், ராஜு அண்ணா அமர்ந்திருப்பதால் நான் சும்மா இருக்கேன், வேறு யாராவதாக இருந்தால் நான் அவரை கீழே இழுத்து போட்டிருப்பேன் என்கிறார் அக்‌ஷரா. பின்னர் ராஜூவை பார்த்து என்னுடன் பேசாதே ராஜு, என் வாழ்க்கையில் இதற்கு பின்னர் உன்னுடன் எப்போதும் பேச மாட்டேன் என சத்தியம் செய்து ஆங்கிலத்தில் கூறுகிறார். இதனை பார்த்த பிரியங்கா, தமிழில் பேசுங்கள் என்கிறார். அதற்கு அக்‌ஷரா பே என கூற கடுப்பான பிரியங்கா, மரியாதையாக பேசும்படி கூறுகிறார். இதனால் அக்ஷ்ரா - பிரியங்கா இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. எனவே இன்று அடிதடிக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 5, Bigg boss timing, Vijay tv