ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியே போவது யார்? வெளியான தகவல்!

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியே போவது யார்? வெளியான தகவல்!

பிக் பாஸ்

பிக் பாஸ்

bigg boss 5 elimination : கடைசி மூன்று இடத்தில் சிபி, அமீர் சஞ்சீவ் உள்ளனர். இதில் இந்த வாரம் நடைபெற்று வரும் டிக்கெட் டு பினாலேவில் அமீர் வெற்றி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்கி 88 நாட்களை கடந்து சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 4 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

  இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

  இந்த நிகழ்ச்சியில் தனிப்பட்ட காரணங்களுக்காக நமீதா மாரிமுத்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் வாரத்தில் குறைந்த வாக்குகள் பெற்றதால் நாடியா வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து பிரபல யூடியூபரான அபிஷேக் ராஜா இரண்டாவது நபராக வெளியேற்றப்பட்டார். பின்னர் சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, அபிநய் ஆகியோர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

  இதனிடையே முதல் வைல்டு கார்டு எண்ட்ரியாக அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வருகை தந்தார். இவரை தொடர்ந்து சஞ்சீவ் மற்றும் அமீர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தனர். ஆனால் அபிஷேக் ராஜா வந்த இரண்டாவது வாரத்திலேயே மீண்டும் வெளியேற்றப்பட்டார். மேலும் கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் டபுள் எலிமினேஷன் நடைபெற்றது. அதில் வருண் மற்றும் அக்ஷ்ரா ஒரே நாளில் வெளியேறினர்.

  இதனால் தற்போது இந்த நிகழ்ச்சியில் ராஜு ஜெயமோகன், பிரியங்கா, பாவ்னி, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 8 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடைபெற்ற நிலையில், நாமினேஷனின் இறுதியில் இந்தவாரம் போட்டியாளர்கள் அனைவரும் நாமினேஷனில் இருப்பதாக பிக் பாஸ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

  இதையும் படிங்க.. வில்லியின் ரீஎன்ட்ரியை பாட்டு போட்டு வரவேற்கும் சீரியல் குழு! பாரதி கண்ணம்மா வெண்பா ரிட்டர்ன்ஸ்

  அதன்படி இவர்களில் குறைந்த வாக்குகள் பெரும் நபர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார் என்பதால் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார்? என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. ஒரு சிலர் நாமினேஷன் குறித்து வாக்குகள் நடத்தி அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். எனினும் இந்த முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாகும் முடிவை ஒத்திருக்கும் என்பதால் இந்த வாக்கெடுப்புகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதில் வழக்கம் போல ராஜு மற்றும் பிரியங்கா முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

  இதையும் படிங்க.. வில்லியின் ரீஎன்ட்ரியை பாட்டு போட்டு வரவேற்கும் சீரியல் குழு! பாரதி கண்ணம்மா வெண்பா ரிட்டர்ன்ஸ்

  கடைசி மூன்று இடத்தில் சிபி, அமீர் சஞ்சீவ் உள்ளனர். இதில் இந்த வாரம் நடைபெற்று வரும் டிக்கெட் டு பினாலேவில் அமீர் வெற்றி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அமீர் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்பட்டு நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடைசி இடத்தில் உள்ள சஞ்சீவ் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளது.

  இந்தவாரமும் இரண்டு பேர் வெளியேற்றப்பட்டால் அதில் சிபியும் வெளியேற வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் டிக்கெட் டு பினாலே முதல் டாஸ்கில், இந்த போட்டியில் விளையாட தகுதி இல்லாத ஒருவரை வெளியேற்ற வேண்டும் என பிக் பாஸ் அறிவித்த நிலையில் அனைவரும் சேர்ந்து நிரூப்பை வெளியேற்றினர். இதனால் நிரூப்பிற்கு இந்த வாரம் மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. எப்போதும் கடைசியாக காப்பாற்றப்படும் நிரூப் இந்தவாரம் மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அதிகாரப்பூர்வமாக யார் வெளியேறுவார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv