பிக் பாஸ் சீசன் 5 முடிந்து 1 வாரத்திற்கு மேல் ஆன பின்பும் நிகழ்ச்சி குறித்தும் பிக் பாஸில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பற்றியும் பல விஷயங்கள் அவ்வப்போது வெளி வந்து கொண்டிருக்கிறது. அதில் வெளியான தகவல் தான் பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் விவரம். இதனுடன் இன்னொரு அப்டேட்டும் கிடைத்துள்ளது. என்ன அது வாங்க பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. மக்களின் உள்ளம் கவர்ந்த போட்டியாளர் ராஜூ வெற்றி வாகை சூடினார். இரண்டாவது இடத்தில் விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா பிடித்தார். நிகழ்ச்சி முடிந்த பிறகு போட்டியாளர்களின் பேட்டிகள் இணையத்தில் வெளியாகின. அதுமட்டுமில்லை பாவ்னி, அமீர், பிரியங்கா ஆகியோர் லைவ் வழியாக ரசிகர்களிடம் உரையாடி அவர்களின் கேள்விக்கு பதில் கூறி வருகின்றனர். இதனால் தினமும் பிக் பாஸ் 5 குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
அதுமட்டுமில்லை அண்மையில் பிக் பாஸ்
போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் வாங்கிய சம்பளம் குறித்த விவரமும் வெளியாகியது. அதில் அதிக சம்பளம் வாங்கியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் பிரியங்கா தான். ஒருநாளைக்கு ரூ.50,000 இவருக்கு சம்பளமாக வழங்கப் பட்டதாக 100 நாட்கள் வ்ரை வீட்டில் தங்கி இருந்து லட்சங்களில் பிரியங்கா சம்பளம் வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க.. எல்லோரையும் ஓட விடுறேன்.. பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக ஜூலி!
இமான் அண்ணாச்சிக்கு ஒருநாளைக்கு 40,000 வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பாவ்னி ரெட்டிக்கு ஒரு நாளைக்கு 20,000 வழங்கப் பட்டதாக தகவல்கள் வெளியாகின. இசைவாணி அக்ஷரா போன்றவர்களுக்கு ரு நாளைக்குரூ. 15,000 என்றும் தாமரை, ஸ்ருதி, நிரூப் ஆகியோருக்கு ஒரு நாளைக்கு ரூ. 10,000 வழங்கப்பட்டதாக தொடர்ந்து தகவல்கள் இணையத்தில் கசிந்தன.
இப்படி இருக்கையில் ஒருவர் மட்டும், அதாவது
போட்டியாளர் வருண் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சம்பளம் வாங்காமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதே சமயம் விஜய் டிவிக்கு இதில் விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. வருணை வெறும் கையுடன் அனுப்ப மனசு இல்லாமல கெளரவ தொகையை தந்து வருணை அனுப்பியதாக செய்திகள் இணையத்தில் கசிந்துள்ளன. ஆனால் இந்த தகவலை வருண் தரப்பில் இதுவரை உறுதி செய்யவில்லை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.