பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்ட அக்ஷரா ரெட்டி தற்போது சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கியுள்ளார். இதுக் குறித்து இன்ஸ்டாவில் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 இந்த ஆண்டு ஜனவரியுடன் முடிவடைந்தது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் தொடங்கிய இந்த சீசனில் வருண், அக்ஷரா, தாமரை செல்வி ஆகியோர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர்கள் லிஸ்டில் இடம் பிடித்தனர்.
5 வயதில் சீரியலில் நடித்த விஜய் டிவி நடிகை.. யாருன்னு கெஸ் பண்ணுங்க!
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போது வருண்-அக்ஷ்ரா நட்பு, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்றாக இருந்தது. ஃபிரீஸ்க் டாஸ்கின் போது, வீட்டுக்குள் வந்த வருண் அம்மாவும், அதை பெருமையுடன் இருவரிடமும் சொன்னார்.பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பும் இருவரும் அடிக்கடி வெளியே சந்திப்பதை, புகைப்படங்களாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுகின்றனர். இன்ஸ்டாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் அக்ஷரா சில நாட்களுக்கு முன்பு முக்கியமான தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
அதாவது யூடியூபில் ‘அக்ஷரா ரெட்டி’ என்ற பெயரில் தனியாக யூடியூப் சேனல் தொடங்க இருப்பதாக கூறினார். ஏற்கெனவே வெள்ளித்திரை பிரபலங்கள் தொடங்கி சின்னத்திரை பிரபலங்கள் பலரும் யூடியூப்பில் சேனல் தொடங்கி பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் டிவி பிரபலங்கள் அர்ச்சனா, மைனா நந்தினி, சித்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா, ஹேமா ராஜ்குமார், மாகாபா, பிரியங்கா என லிஸ்ட் ரொம்ப பெருசு. இந்த வரிசையில் இப்போது அக்ஷராவும் இணைந்துள்ளார்.
பிரிய போகிறார்களா சக்தி - ஜனனி? எதிர் நீச்சலில் இயக்குனர் வைக்கும் ட்விஸ்ட்!
முழுக்க முழுக்க ரசிகர்களை நம்பி இந்த முயற்சியில் இறங்கி இருப்பதாக அக்ஷரா தெரிவித்துள்ளார். புதியதாக தொடங்கியுள்ள சேனலில் இதுவரை 2 வீடியோக்களை அக்ஷரா வெளியிட்டுள்ளார். அதில் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற தருணங்கள் அதற்கான போராட்டங்கள் பற்றியும் ஷேர் செய்துள்ளார். வரும் நாட்களில் இன்னும் பல வீடியோக்களை ரசிகர்கள் எதிர் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.