பிக்பாஸ் வீட்டில் முகமூடிகள் அவிழ ஆரம்பித்துவிட்டது: இந்த வாரம் வெளியேறப்போவது யார்?... கமல் சூசகம்!

பிக் பாஸ் வீட்டிற்குள் முகமூடிகள் அவிழ ஆரம்பித்துவிட்டது. பார்க்க பெரிய வில்லனின் அடியாள் போல உள்ளதே, பேச்சும் ஒரு மாதிரி உள்ளதே, நல்லவரா? என்ற சந்தேகம் இருந்தது, ஆனால் நிஜமான முகம் தெரிய ஆரம்பித்தவுடன் நல்லவர் தான் என தொற்றுகிறது, ஹீரோவாவே மாறிவிடுவார் போலவே! அப்போ நாம் நல்லவர்கள் என நினைத்தவர்கள் எல்லாம்? ... பார்ப்போம் என்று கமல் கூறுகிறார்.

பிக்பாஸ் வீட்டில் முகமூடிகள் அவிழ ஆரம்பித்துவிட்டது: இந்த வாரம் வெளியேறப்போவது யார்?... கமல் சூசகம்!
பிக்பாஸ் தமிழ் 4 - கமல்ஹாசன்
  • News18
  • Last Updated: October 17, 2020, 6:45 PM IST
  • Share this:
பிக் பாஸ் நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், வைல்ட் கார்டு எண்ட்ரியாக அர்ச்சனா வந்துள்ளார். வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த வாரம் நடந்தவைகள் குறித்து விவாதம் மற்றும் எலிமினேஷன் நடைபெறும். கடந்த வாரம் முதல் வாரம் என்பதால் யாரும் வெளியே செல்லவில்லை, ஆனால் இந்த வாரம் 7 பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். அதில் யார் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்துவிடும்.

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில், கமலஹாசன் பேசும் காட்சிகள் உள்ளது. அதில் பிக் பாஸ் வீட்டிற்குள் முகமூடிகள் அவிழ ஆரம்பித்துவிட்டது. பார்க்க பெரிய வில்லனின் அடியாள் போல உள்ளதே, பேச்சும் ஒரு மாதிரி உள்ளதே, நல்லவரா? என்ற சந்தேகம் இருந்தது, ஆனால் நிஜமான முகம் தெரிய ஆரம்பித்தவுடன் நல்லவர் தான் என தொற்றுகிறது, ஹீரோவாவே மாறிவிடுவார் போலவே! அப்போ நாம் நல்லவர்கள் என நினைத்தவர்கள் எல்லாம்? ... பார்ப்போம் என்று கூறுகிறார்.
அவர் பேசியதை வைத்து பார்க்கையில் சுரேஷ் சக்கரவர்த்தியை தான் கூறுகிறார் என தெரிகிறது. முன்னதாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அடுத்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடைபெற்றது. அதில் போட்டியாளர்களாக ரியோ, வேல்முருகன் மற்றும் கேப்ரியலா ஆகியோரை ஹவுஸ்மேட்ஸ் தேர்ந்தெடுத்தனர். அப்போது ரியோ, வேல்முருகன் மற்றும் கேப்ரியலா ஆகியோருக்கு யாரெல்லாம் ஆதரவு தருகிறார்கள் என பிக் பாஸ் கேட்ட நிலையில், கேப்ரியலாவுக்கு சுரேஷ் சக்ரவர்த்தி மட்டுமே ஆதரவு தெரிவித்தார்.

Also read... Gold Rate | அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?டாஸ்கின் படி மூன்று பேரையும் அவரது ஆதரவாளர்கள் தூக்க வேண்டும். எனவே சுரேஷ் சக்ரவர்த்தி கேப்ரியலாவை தூக்க வேண்டும். ஆனால் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு கேப்ரியலா அவர் மீது ஏற மறுத்தார். ஆனால் சுரேஷ் என்னால் முடியும் என கூறி அவரை ஊக்குவித்து போட்டியில் பங்கேற்க வைத்தார். ஆனால் கேப்ரியலா 10 நிமிடங்களிலேயே இறங்கி விட்டார். அதனை தொடர்ந்து கண்ணீருடன் அவர் சுரேஷுக்கு நன்றி மற்றும் சாரி என கூறினார். இறுதியில் டாஸ்கில் ரியோ வெற்றி பெற்று அடுத்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்த டாஸ்கில் ரியோவை பாலாஜி தூக்கி நிற்க, ரம்யா, ஆஜித், அனிதா, நிஷா உள்ளிட்டோர் ஆதரவாக நின்றனர். அதேபோல வேல்முருகனை நடிகர் ஆரி தூக்கி நிற்க, அர்ச்சனா, ரேகா, சம்யுக்தா உள்ளிட்டோர் ஆதரவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை சுரேஷ் ஒரு வில்லனாகவே அனைவருக்கும் தெரிந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் அவர் தனி ஆளாக நின்று கேப்ரியல்லா வெற்றி பெற தனது உடல்நலத்தையும் கருத்தில் கொள்ளலாம் உதவி செய்தது பிக் பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்துள்ளது. கேப்ரியலாவை தூக்கியதால் அவர் படுக்கையில் வலியால் துடித்தார். இந்த காட்சிகள் சுரேஷ் மீதி இருந்த ஒரு நெகடிவ் சிந்தனையை மாற்றி அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்ககளில் மீம்ஸ்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
First published: October 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading