• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg boss 4 Tamil | பிக்பாஸில் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டதில் நீடிக்கும் மர்மம் என்ன?

Bigg boss 4 Tamil | பிக்பாஸில் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டதில் நீடிக்கும் மர்மம் என்ன?

சுரேஷ் சக்ரவர்த்தி

சுரேஷ் சக்ரவர்த்தி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்படவில்லை என்றும் வேறு காரணத்தினால் தான் அவர் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
கடந்த அக்டோபர் 4-ம் தேதியிலிருந்து தமிழில் பிக்பாஸ் 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்நிகழ்ச்சியில் இரண்டாவது வாரத்தில் நடிகை ரேகாவும், அவரைத் தொடர்ந்து பாடகர் வேல்முருகனும் வெளியேற்றப்பட்டனர். கடந்த வார எவிக்‌ஷன் பட்டியலில் அர்ச்சனா, ஆரி, சனம், பாலாஜி, சோம் சேகர், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றிருந்த நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டதாக இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தகவல்கள் வெளியாகின. ஆனால் பிக்பாஸ் வீட்டில் செய்யும் குசும்புத்தனமான நடவடிக்கைகளால் அதிக ரசிகர்களைப் பெற்றிருக்கும் அவர் வெளியேற்றப்பட வாய்ப்பே இல்லை என்று பார்வையாளர்கள் கருதினர்.

ஆனால் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் நேற்றைய நிகழ்ச்சியில் அறிவித்தது பிக்பாஸ் பார்வையாளர்களை அதிர்ச்சியடையச் செய்தது. ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் யாரும் சுரேஷ் சக்ரவர்த்தி வீட்டை விட்டு செல்வதை நினைத்து அவ்வளவாக அதிர்ச்சி காட்டவில்லை. சனம் ஷெட்டி மட்டும் அவர் வெளியே செல்வதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று கேட்டார். அப்போது காரணம் உங்களுக்குத் தெரிய வரும் நான் சொல்லக் கூடாது என்று பதில் சொன்னார் சுரேஷ்.



மேலும் சுரேஷ் சக்ரவர்த்தி பற்றி பேசிய கமல், ஒவ்வொரு முடிவும் தொடக்கம் தான். சுரேஷை நான் வெளியில் அனுப்பவில்லை. நானாக அனுப்பினேன் என்று நம்பாதீர்கள். அவர் வெளியேறியதற்கான காரணம் உள்ளேயும் இருக்கலாம். சுரேஷாகவும் இருக்கலாம். என்னவென்று விவாதியுங்கள் என்று கூறினார். அது என்ன காரணம் என்ற குழப்பத்தில் இருக்கின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

மேலும் படிக்க: மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்ற காஜல் அகர்வால் - கிச்லு ஜோடி - போட்டோஸ்

ஒருவேளை சுரேஷ் சக்ரவர்த்தியின் உடல்நலனை கருத்தில் கொண்டு அவரை வெளியேற அனுமதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சுரேஷ் வெளியேற்றப்பட்டதில் மர்மம் நீடித்து வரும் நிலையில் விரைவில் உண்மையான காரணம் வெளியே தெரிய வரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: