Bigg Boss 4 Tamil: ஜெயிலுக்கு சென்ற பாலாஜி, சுசித்ரா.. தலைவர் போட்டிக்கு தேர்வான 6 நபர்கள்..

இன்று வெளியான முதல் புரோமோவில், மணிக்கூண்டு டாஸ்கில் இறுதி இடத்தில் உள்ள பாலாஜி, ரம்யா, சுஜித்ரா ஆகிய மூன்று பேரில் இருந்து யாராவது 2 பேரை ஜெயிலுக்கு அனுப்ப தேர்ந்தெடுங்கள் என பிக் பாஸ் அறிவித்தார்.

Bigg Boss 4 Tamil: ஜெயிலுக்கு சென்ற பாலாஜி, சுசித்ரா.. தலைவர் போட்டிக்கு தேர்வான 6 நபர்கள்..
பாலாஜி, சுஜித்ரா
  • News18
  • Last Updated: November 20, 2020, 3:14 PM IST
  • Share this:
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மணிக் கூண்டு டாஸ்க் இன்று கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் போட்டியாளர்கள் குழுவிற்கு 3 நபர்களாக பிரிந்து 5 குழுவாக விளையாட வேண்டும் என கூறப்பட்டது. இந்த டாஸ்கில் கடிகாரமாக மாறி நேரத்தை கணக்கிட்டு ஒவ்வொரு குழுவும் 3 மணி நேரம் என பிரித்து அதற்குள் வீட்டு வேலைகளும் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. தொடர்ந்து 45 மணி நேரம் இரவு, பகலாக மழை, காற்று, வெயிலில் நின்று விளையாடினர். 

இதில் சனம் செட்டி, நிஷா, அனிதா ஆகிய மூவர் ஒரு குழுவாகவும், ரியோ கேப்ரில்லா ஆரி ஆகிய 3 பேரும் ஒரு குழுவாகவும். அர்ச்சனா, சம்யுக்தா, சோம் சேகர் ஆகிய 3 பேரும் ஒரு குழுவாகவும், ஷிவானி அஜித், ரமேஷ் ஆகிய 3 பேரும் ஒரு குழுவாகவும், பாலா, அனிதா சுசித்ரா ஆகிய 3 பேரும் ஒரு குழுவாகவும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வந்தார்கள். ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் அனைவரும் இந்த டாஸ்கை சீரியஸாக மேற்கொண்டனர். வழக்கம் போல பாலாஜி மட்டும் அவ்வப்போது சொதப்பினார். 

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற டாஸ்க் ஒரு வழியாக நேற்று நிறைவடைந்த நிலையில், இந்த டாஸ்கில் அர்ச்சனா, சம்யுக்தா, சோம் ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர். ரியோ கேப்ரில்லா ஆரி ஆகிய 3 பேரும் இரண்டாம் இடத்தை பிடித்தனர். எனவே அர்ச்சனா, சம்யுக்தா, சோம், ரியோ கேப்ரில்லா, ஆரி ஆகிய ஆறு நபர்களும் அடுத்த வார தலைவர் பதவிக்கு போட்டியிட தேர்வாகியுள்ள நபர்கள் என பிக் பாஸ் அறிவித்தார். இதனால் அவர்கள் உற்சாகமாக காணப்பட்டனர். 


Also read... Eeswaran | ’ஈஸ்வரன் படத்தலைப்பிலேயே ’வரன்’ உள்ளது. 2021-ஆம் ஆண்டில் சிலம்பரசனுக்கு நல்ல ’வரன்’ கிடைக்கும்..’ - டி.ராஜேந்தர் உறுதி..



இதனை தொடர்ந்து போட்டியாளர்களுக்கு அவர்களது டாஸ்க்கின் அடிப்படையில் மதிப்பெண் கொடுக்கப்பட்டு ஷாப்பிங் செய்யுமாறு கூறப்பட்டது. அதில் ஷிவானி ஆஜித், ரமேஷ் அணியினர் கொடுத்த மதிப்பெண்ணை விட அதிகமாக ஷாப்பிங் செய்ததால் அவர்கள் வாங்கிய பொருட்கள் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில், மணிக்கூண்டு டாஸ்கில் இறுதி இடத்தில் உள்ள பாலாஜி, ரம்யா, சுஜித்ரா ஆகிய மூன்று பேரில் இருந்து யாராவது 2 பேரை ஜெயிலுக்கு அனுப்ப தேர்ந்தெடுங்கள் என பிக் பாஸ் அறிவித்தார்.

இதுகுறித்து ஆலோசனை நடத்தும் சக போட்டியாளர்கள் ரம்யா நன்றாக டாஸ்க் செய்தார் என்பதால் பாலாஜி, சுஜித்ரா ஆகிய இருவரையும் தேர்ந்தெடுக்கின்றனர். பின்னர் இருவரும் ஜெயிலுக்கு செல்கின்றனர். ஷிவானி வெளியே இருந்து பாலாஜியை பார்க்கும் காட்சிகள் புரோமோ வீடியோவில் இடம் பெற்றுள்ளது. 
First published: November 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading