பிக்பாஸ் அறிவிப்பு வெளியிட்ட விஜய் டிவி - ரசிகர்கள் கோரிக்கை

பிக்பாஸ் அறிவிப்பு வெளியிட்ட விஜய் டிவி - ரசிகர்கள் கோரிக்கை
பிக்பாஸ் - கமல்ஹாசன்
  • Share this:
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியை விஜய் டிவி இன்று மீண்டும் ஒளிபரப்பியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த வரும் 14-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டு அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர அனுமதித்துள்ளது அரசாங்கம்.

இதையடுத்து மக்கள் இதுவரை வாழ்ந்திராத புதிய வாழ்க்கை முறைக்கு தங்களை பழக்கப்படுத்தி வருகின்றனர்.ஊரடங்கு உத்தரவால் மக்களை பொழுதுபோக்கும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களின் படப்பிடிப்பு பணிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


இதனால் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகள் ஏற்கெனவே ஒளிபரப்பப்பட்ட சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை மறுஒளிபரப்பு செய்து வருகின்றன. இந்நிலையில் அதிகம் பேரால் பார்த்து ரசிக்கப்பட்ட பிக்பாஸ் 3 நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்பியுள்ளது விஜய் டிவி. இதற்கான புரமோ வீடியோ விஜய் டிவி ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டதை அடுத்து, வெட்டப்பட்ட காட்சிகளை இப்போது ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து சின்னத்தம்பி என்ற சீரியலையும் மறுஒளிபரப்பு செய்யவிருப்பதாக அதில் நடித்த பிரஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: பவன் கல்யாண் வைத்த கோரிக்கை - அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய தமிழக முதல்வர்First published: March 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading