பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றப்படுவாரா?

Web Desk | news18
Updated: July 9, 2019, 1:22 PM IST
பிக்பாஸ்  வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றப்படுவாரா?
வனிதா விஜயகுமார்
Web Desk | news18
Updated: July 9, 2019, 1:22 PM IST
பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் 23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. முதல்வாரத்தில் வனிதா விஜயகுமார் வீட்டின் கேப்டனாக தேர்வானார். அதனால் இரண்டாவது வாரத்தில் அவரை நாமினேஷன் செய்ய முடியாத நிலை உருவானது. 2-வது வாரத்தில் முதல் ஆளாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் பாத்திமா பாபு.

நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே வனிதாவின் நடவடிக்கைகள் பார்வையாளர்களின் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன. ஒவ்வொரு சீசனிலும் ஒருவர் நிகழ்ச்சியின் பேசுபொருளாகவும், வில்லியாகவும் ரசிகர்களால் பார்க்கப்படுவர். அந்தவகையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமாரை வில்லியாகவே பார்த்து வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

அதற்கு காரணம், அவர் மற்ற போட்டியாளர்களை அணுகும் விதம், அபிராமி, மதுமிதாவுக்கு எதிராக அவர் பேசுவது போன்ற செயல்கள் தான் என்பது நேயர்களின் சமூக வலைதள பதிவுகளை பார்த்தாலே புரியும்.

வனிதா விஜயகுமார்


இந்நிலையில் இந்தவாரம் வெளியேற்றப்படுவோருக்கான பட்டியலில் வனிதா விஜயகுமார், மீரா மிதுன், சரவணன், மதுமிதா, மோகன் வைத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் இந்த வார இறுதியில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்.

சகபோட்டியாளர்களிடம் சண்டையிடுவதால் வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.எனினும், பிக்பாஸ் சுவாரஸ்யமாக இருப்பதற்கு வனிதா விஜயகுமார் முக்கியக் காரணம். அதனால் அவர் அவ்வளவு சீக்கிரம் வெளியேற்றக் கூடாது என்பதும் சிலரின் கோரிக்கையாக உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வனிதா விஜயகுமார் வெளியேற்றப்படுவாரா அல்லது ரசிகர்களால் காப்பாற்றப்பட்டு தக்கவைக்கப்படுவாரா என்பது இந்தவார இறுதியில் தெரிய வரும்.First published: July 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...