பிக்பாஸ்: நேரடியாக மோதிக்கொள்ளும் சேரன்... சரவணன்...!

கடந்த சில நாட்களாக சேரனுக்கும் சரவணனுக்கும் இடையே பனிப்போர் தற்போது நேரடியாக வெடித்துள்ளது என்றும் பார்வையாளர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

news18
Updated: August 2, 2019, 10:55 AM IST
பிக்பாஸ்: நேரடியாக மோதிக்கொள்ளும் சேரன்... சரவணன்...!
சரவணன் | சேரன்
news18
Updated: August 2, 2019, 10:55 AM IST
பிக்பாஸ் வீட்டில் இன்று இயக்குனர் சேரனும் நடிகர் சரவணனுன் நேரடியாக மோதிக்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த மாதம் தொடங்கியது. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 39 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

இரண்டாவது வாரத்தின் இறுதியில் முதல் ஆளாகா பாத்திமா பாபு வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீராமிதுன் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர்.


இந்நிலையில் இந்த வாரம்  கவின், ஷாக்சி, மதுமிதா, அபிராமி, ரேஷ்மா உள்ளிட்ட 5 நபர்கள்  நாமினேஷன் பட்டியளில் உள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களாக ஷாக்சி மற்றும் கவினுக்கு இடையேயான பிரச்னை குறித்தே பிக்பாஸ் இல்லத்தில் பேசப்பட்டது. இதைக் குறித்து பேசிய நெட்டிசன்கள் டாப்பிக்கை மாற்றுங்கனு மீம் போட்டு கலாய்க்கவும் செய்தனர்.

இந்நிலையில் இன்று நிகழ்சிக் குழு வெளியிட்டுள்ள புரோமோ வீடியோவில் இயக்குனர் சேரனும் நடிகர் சரவணனுடன் நேரடியாக மோதிக்கொள்ளுவது போல காட்டப்பட்டுள்ளது.

Loading...கடந்த சில நாட்களாக சேரனுக்கும் சரவணனுக்கும் இடையே பனிப்போர் தற்போது நேரடியாக வெடித்துள்ளது என்றும் பார்வையாளர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

Also see...

First published: August 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...