பிக்பாஸ் ஸ்கூல்... ஆசிரியர்களாக மாறிய கஸ்தூரி, சேரன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 58-வது நாளுக்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் ஸ்கூல்... ஆசிரியர்களாக மாறிய கஸ்தூரி, சேரன்!
பிக்பாஸ் ஹவுஸ்
  • News18
  • Last Updated: August 20, 2019, 10:21 AM IST
  • Share this:
பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் லக்சுரி பட்ஜெட் டாஸ்க்கிற்காக இன்று பள்ளி மாணவர்கள் போல வேடமிட்டுள்ளனர்.

100 நாட்கள் வரை ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 57 நாட்கள் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.

கடந்த வாரத்தில் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சி மேற்கொண்டதன் காரணமாக அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் எவிக்‌ஷன் மூலமாக நடிகை அபிராமி குறைந்த வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டார்.


இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நேற்று நடைபெற்றது. அதில், சேரன், கஸ்தூரி, தர்ஷன், சாண்டி உள்ளிட்டோர் எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து இன்றைய புரோமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பிக்பாஸ் வீடு பிக்பாஸ் பள்ளியாக மாறியுள்ளது. கஸ்தூரியும் சேரனும் ஆசிரியர்களாகவும், மற்ற ஹவுஸ் மெட்ஸ் அனைவரும் மாணவர்களாகவும் மாறியுள்ளனர்.

அதில், சாண்டி, தர்ஷன் உள்ளிட்டோர் குறும்பு செய்யும் மாணவர்களாகவும் ஆசிரியர் கஸ்தூரியை ஆயம்மா கஸ்தூரி என்று கலாய்ப்பது போன்றும் அந்த வீடியோவில் உள்ளது.

Also see...

First published: August 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்