பிக்பாஸ்: வெளியேறும் நபரை அறிவித்த கமல் - கண்ணீரில் அபிராமி!

Bigg Boss Tamil | இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில், மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், ஷெரின் அபிராமி ஆகியோர் உள்ளனர்.

பிக்பாஸ்: வெளியேறும் நபரை அறிவித்த கமல் - கண்ணீரில் அபிராமி!
கமல்ஹாசன்
  • News18
  • Last Updated: July 21, 2019, 1:37 PM IST
  • Share this:
பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியாகும் நபரை கமல்ஹாசன் அறிவிக்க கண்ணீர் விடுகிறார் அபிராமி.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த ஜுன் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி தற்போது 25 நாட்களைக் கடந்துள்ளது. இரண்டாவது வார இறுதியில் பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் நபராக வெளியேற்றப்பட்டார் பாத்திமா பாபு. அவரைத் தொடர்ந்து நடிகை வனிதா விஜயகுமாரும் வெளியேற்றப்பட்டார்.

இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில், மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், ஷெரின் அபிராமி ஆகியோர் உள்ளனர். நேற்றைய நிகழ்ச்சியில் அகம் டிவி வழியாக பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் மீரா மிதுனுக்காக முதல் குறும்படத்தை ஒளிபரப்பச் செய்தார். அதேபோல் கவின், சாக்‌ஷி, லாஸ்லியா இடையே கடந்த ஒருவாரமாக நிலவி வந்த காதல் பிரச்னை குறித்தும் பேசி கவினை தெளிவுபடுத்தினார்.


அதைத்தொடர்ந்து வரும் வாரத்தில் பிக்பாஸ் வீட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற ரேஸ்மா வீட்டின் தலைவரானார்.

தொடர்ந்து வெளியேற்றப்படுவோரிடம் பேசிய கமல்ஹாசன், யார் இந்த வாரம் காப்பாற்றப்படுவார் என்ற கேள்வியை ஒவ்வொருவரிடமும் முன் வைத்தார். அதற்கு ஒவ்வொருவரும் ஒரு பதிலளிக்க, இந்த வாரம் காப்பாற்றப்படுவோரை அறிவிக்காமல் இன்று அறிவிப்பதாக கூறி விடைபெற்றார்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் புரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வெளியேற்றப்படுவோரை அறிவிக்க தயாராகிறார் கமல்ஹாசன். இதையறிந்த அபிராமி கண்ணீர் வடிக்கிறார். மோகன் வைத்யா நான் இருந்தால் என்ன போனால் என்ன என்று கூற, சேரன் கருத்தே இல்லை என்கிறார்.

கடந்த வார நிகழ்ச்சியை ஒப்பிட்டு பார்க்கையில், நடிகை மீரா மிதுன் சக போட்டியாளர்களிடையே குழப்பத்தையும், பார்வையாளர்கள் மத்தியில் எரிச்சலையும் ஏற்படுத்தியதால், அவருக்கு குறைவான வாக்குகள் பதிவாகியிருக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.அதேபோல் மோகன் வைத்யாவும் இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற பிக்பாஸின் கூற்றுப்படியும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது.

First published: July 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்