பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலியல் புகார்.... தொகுப்பாளர் வீட்டின் முன்பு போராட்டம்

தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இந்த சீசனை நடிகர் நாகர்ஜூனா தொகுத்து வழங்குகிறார்

news18
Updated: July 21, 2019, 11:54 AM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலியல் புகார்.... தொகுப்பாளர் வீட்டின் முன்பு போராட்டம்
பிக்பாஸ் தெலுங்கு
news18
Updated: July 21, 2019, 11:54 AM IST
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரி நடிகர் நாகர்ஜுனா வீட்டின் முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்தியில் 13 -வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், தமிழில் 3 வது சீசன் நடந்து வருகிறது.

இதேபோல் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இந்த சீசனை நடிகர் நாகர்ஜூனா தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தங்களை படுக்கைக்கு அழைத்ததாக பிரபல டிவி தொகுப்பாளார்கள் ஸ்வேதா ரெட்டி, காயத்ரி குப்தா ஆகியோர் புகார் கூறியிருந்தனர். இந்த நிகழ்வு தெலுங்கு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரி நடிகர் நாகர்ஜுனா வீட்டின் முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு பெண்கள் கொடுத்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் ஏன் மவுனமாக இருக்கிறீர்கள் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக ஸ்வேதா ரெட்டி, காயத்ரி குப்தா ஆகியோர் அளித்த புகாரின் பேரில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் 4 பேர் மீது ஹைதராபாத் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிகபாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை ஒளிபரப்பக்கூடது என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சிகளை சென்சார் செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் ஜெகதீஸ்வர் ரெட்டி தெலங்கானா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர இருக்கிறது.

Loading...

Also watch

First published: July 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...