ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸ் சீசன் 5 ப்ரோமோ : "வாத்தியை ஏமாத்தவே முடியாது" கமல் அதிரடி!

பிக்பாஸ் சீசன் 5 ப்ரோமோ : "வாத்தியை ஏமாத்தவே முடியாது" கமல் அதிரடி!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

நாணயங்களை பயன்படுத்தி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப்போவது யார் ?

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  இன்றைய எபிசோடின், முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியள்ளது.

  ஒவ்வொரு சனிக்கிழமையும் பிக்பாஸ் ரசிகர்களுக்கு பல்ஸ் எகிறும். பிக்பாஸ் தமிழ் சீசன் 5 சனி மட்டும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகளுக்கென்றே தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கிறது. குறிப்பாக சனிக்கிழமை மதியம் வெளியிடப்படும் முதல் ப்ரோமோவுக்காவே காத்திருக்கும் ரசிகர்கள் ஏராளம். இன்றைய எபிசோடின், முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வண்ணம் முதல் ப்ரமோவில் கமல் அசத்தியுள்ளார்!

  "கேட்க வேண்டிய கேள்விகள் ஏராளம். ஒவ்வொரு ரூல்ஸா உடைச்சிட்டே இருக்காங்க. வாத்திய ஏமாத்தவே முடியாது" என்று தனக்கே உரிய மிடுக்கான பாணியில், பாடி லாங்குவேஜில் கமல் பேசிய வசனங்கள் 'நெருப்புடா' என்று தெறிக்கின்றன.எப்பொழுதுமே வார இறுதி நாட்களில் வரும் எபிசோடுகளில், வார நாட்களில் நடந்த குழப்பங்கள் அல்லது பெரிய சச்சரவு செய்தவர்களை கமல் கேள்வி கேட்க வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமாக இருக்கும். இந்த வாரம் பிக் பாஸ் ஹவுசில் நடந்த கலாட்டாக்களுக்குக் குறைவே இல்லை. அதுவும், போட்டியாளர்களுக்கு ஸ்பெஷல் பவர் வழங்கும் பஞ்சதந்திரம் டாஸ்க் பல்வேறு குளறுபடிகளுக்கு நடுவே நிறைவேறியது.

  பஞ்சதந்திரம் டாஸ்க்கில், ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு பாணியில் விளையாடினார்கள். நாணயம் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு 'ஸ்பெஷல் பவரும்' உள்ளது. இந்த டாஸ்க்கில் எப்படியாவது நாணயங்களைப் பெற்று விட வேண்டும் என்று பல போட்டியாளர்கள் விதிமீறி நடந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் ஏமாற்றி, இறுதியாக ஐந்து போட்டியாளர்கள் ஆளுக்கொரு நாணயத்தை வென்றனர்.நாங்க தான் கெத்து, எங்களோட பவர் எல்லாருக்கும் தெரியணும், டாப் 5 நம்ம மூணு பேரும் தான் இருப்போம் என்று, மூவர் குழுவான பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக் குழப்பங்களை விளைவித்து கொண்டிருந்தது பிற ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் வரவேற்கப்படவில்லை. இது சீசன் நான்கின் அன்பு கேங் மாதிரியே இருக்கிறதே என்று பெரும்பாலான ரசிகர்களுக்கும் இவர்களின் செயல்கள் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ரகசியமாக எதையோ எழுதி காட்டி, அதை யாரும் அறியாமல் கிழித்தும் போட்டுவிட்டார் என்று அக்ஷராவை சரமாரியாகக் கேள்வி கேட்ட பிரியங்காவும், யாரும் அறியாமல் மோர்ஸ் கோடு போல, கைகளால் மறைத்துக் கொண்டு நிரூப் கையில் எதையோ எழுதிக் காட்டினார். கமல் இதைப் பற்றி கேட்க வேண்டும் அல்லது குறும்படம் போட்டுக் காட்ட வேண்டும் என்பது பல ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. நான் வீட்டுக்குப் போக வேண்டும் என்று அழ ஆரம்பித்த அக்ஷராவை நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் சமாதானம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

  பிக் பாஸ் வீட்டில் இனி யாரும் பேசியே விபூதி அடிக்க முடியாது.. ரெய்டு விடும் கமல்ஹாசன்!

  அது மட்டுமின்றி, நாணயங்கள் வைத்திருப்பவர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய பவர் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களைத் தாங்களே எலிமினேஷனில் இருந்து காப்பாற்றிக் கொள்ளலாம் அல்லது வேறு யாரேனும் ஒருவரைக் காப்பாற்றலாம். அது மட்டுமின்றி, தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் நபரின் பொறுப்பை பறித்து, அவரை நேரடியாக எலிமினேஷன் பட்டியலில் சேர்க்கலாம் என்ற பவரும் உள்ளது.

  ' isDesktop="true" id="593559" youtubeid="m4an3Ubi7DI" category="television">

  பஞ்சதந்திரம் டாஸ்க்கில் வெற்றி பெற்றவர்கள் நிரூப், வருண், இசைவாணி, தாமரைச்செல்வி மற்றும் பாவனி ரெட்டி. இவை எல்லாம், இந்த வார இறுதி எபிசோடுகளை மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு எபிசோடாக மாற்றியுள்ளது. அதற்கு ஏற்றார் போலவே முதல் ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை எற்படுத்தியிள்ளது. யார் பார்வையாளர்களால் காப்பாற்றப்படுவார் என்பதும், நாணயங்களை பயன்படுத்தி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப்போவது யார் என்பதும் வெகு விரைவில் தெரிந்துவிடும்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 5, Vijay tv