ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''பிரைவேட் பார்ட்டுக்கு மார்க் போடச் சொன்னார்'' - பிக்பாஸ் பங்கேற்பாளர் குறித்து நடிகை பரபர புகார்!

''பிரைவேட் பார்ட்டுக்கு மார்க் போடச் சொன்னார்'' - பிக்பாஸ் பங்கேற்பாளர் குறித்து நடிகை பரபர புகார்!

பிக்பாஸ்

பிக்பாஸ்

”பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் கொடூரர்கள் எல்லாம் எப்படித்தான் பிக் பாஸ் வீட்டுக்கு போகிறார்களோ? “

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரைவேட் பார்ட்டை காட்டி மார்க் போட சொன்ன மோசமான நபர் எல்லாம் பிக் பாஸ் வீட்டில் இருக்க கூடாது என பொங்கியுள்ளார் பிரபல நடிகை.

  பாலிவுட் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய அளவில் ரீச் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் போதும் அவர்களின் வாழ்க்கையையே தலைகீழாக மாறிவிடும் என்ற பார்வையும் இந்தி பிக் பாஸூக்கு உண்டு. இதுவரை 15 சீசன்கள் வெற்றிக்கரமாக இந்தியில் ஒளிப்பரப்பாகியுள்ளன. தற்போது பிக் பாஸ் 16வது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1 முதல் டெலிகாஸ்ட் ஆகி வரும் இந்த சீசனில் வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த சீசனையும் வழக்கம் போல் நடிகர் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

  நேத்து ராத்திரி எம்மா.. ஜிபி முத்து டான்ஸூக்கு அமுதவாணன் இப்படி சொல்லிட்டாரே!

  அதே சமயம் தமிழிலும் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கப்பட்டுள்ளது. தமிழிலும் தொடர்ந்து 6வது முறை உலக நாயகன் கமல்ஹாசன் பிக் பாஸை தொகுத்து வழங்குகிறார். தமிழ் பிக் பாஸ் தொடங்கி 2 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் தற்சமயம் எந்த சர்ச்சையும் இல்லை. போட்டியாளர்களும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த பிரச்சனையிலும் சிக்கவில்லை.ஆனால் இந்தியில் தற்போது மிகப் பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. பிக் பாஸ் 16வது சீசனில் போட்டியாளராக களம் இறங்கியுள்ள பிரபலம் மீது நடிகை பரபரப்பான குற்ற்சாட்டை முன்வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியையும் அவர் சாடியுள்ளார்.

  பிக்பாஸ் 16வது சீசனில் போட்டியாளராக இயக்குனர்  சஜித் கான் காலடி எடுத்து வைத்துள்ளார். இவர் இதற்கு முன்பு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இவர் மீது பல பெண்கள் MeToo புகாரை முன் வைத்துள்ளனர். இந்நிலையில் பிரைவேட் பார்ட்டை காட்டி 0 முதல் 10 வரை ரேட்டிங் போட சொல்லி பாலியல் தொல்லை கொடுத்த மோசமான நபரை எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனுமதிக்கலாம் ? என நடிகை ஷெர்லின் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். பாலிவுட் கவர்ச்சி நடிகையான ஷெர்லின் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் இதுக் குறித்து பதிவு செய்துள்ளார்.

  பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் கொடூரர்கள் எல்லாம் எப்படித்தான் பிக் பாஸ் வீட்டுக்கு போகிறார்களோ? என்னிடம் பிரைவேட் பார்ட்டை காட்டி 0 முதல் 10 வரை ரேட்டிங் போட சொன்ன மோசமான நபர் சஜித் கான் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார். நானும் பிக் பாஸ் வீட்டுக்கு போய் அவருக்கு ரேட்டிங் கொடுக்க விரும்புகிறேன் . சல்மான்கான் உங்கள் நிலைப்பாட்டை சரியானதாக எடுங்கள் என கூறி நடிகர் சல்மான் கானையும் டேக் செய்துள்ளார். நடிகை ஷெர்லின் சோப்ராவின் இந்த பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg boss title winner, Bollywood, Salman khan