பிக்பாஸ் டைட்டில் வின்னர் மாரடைப்பால் மரணம்

சித்தார்த் சுக்லா

நேற்று இரவு தூங்குவதற்கு முன் சித்தார்த், சில மருந்துகளை உட்கொண்டதாகவும், காலையில் எழுந்திருக்கவில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

 • Share this:
  பிக் பாஸ் 13 டைடில் வின்னர் சித்தார்த் சுக்லா திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 40.

  பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நட்சத்திரம் சித்தார்த் சுக்லா, பாலிகா வடு சீரியல் மூலம் பல லட்சம் இதயங்களை வென்றார். அவர் இன்று இறந்ததாக, கூப்பர் மருத்துவமனையின் அதிகாரி உறுதிப்படுத்தினார். இன்று காலையில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வசித்து வந்தார் சித்தார்த்.

  நேற்று இரவு தூங்குவதற்கு முன் சித்தார்த், சில மருந்துகளை உட்கொண்டதாகவும், காலையில் எழுந்திருக்கவில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர், மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை உறுதி செய்தது. தற்போது பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது, விரைவில் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தவிர, "ஜலக் திக்லா ஜா 6", "ஃபியர் ஃபேக்டர்: காட்ரோன் கே கிலாடி 7" மற்றும் "பிக் பாஸ் 13" உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் சித்தார்த் சுக்லா பங்கேற்றுள்ளார். இதில் அவர் பிக் பாஸ் 13-ன் டைட்டில் வின்னரானது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: