Home /News /entertainment /

பிக் பாஸ் தமிழ் : பணப்பெட்டி டாஸ்க்கில் ஸ்மார்ட்டாக செயல்பட்ட இருவர்!

பிக் பாஸ் தமிழ் : பணப்பெட்டி டாஸ்க்கில் ஸ்மார்ட்டாக செயல்பட்ட இருவர்!

கவின், கேபி

கவின், கேபி

பிக் பாஸ் சீசன் 3-இல் கலந்து கொள்ள கவினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கவினுக்கு அப்போது ஆர்வம் இல்லை. அதன் பிறகு கவினின் குடும்பம் கடன் தொல்லையில் சிக்கி, போலீஸ் ஸ்டேஷன் வரை பிரச்சனை சென்றது, எனவே..

பிக் பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் புதுமுகங்களை களமிறக்கியது பிக் பாஸ் குழு. அதனால் ஸ்வாரஸ்யம்  குறைந்து டிஆர்பி ரேட்டிங்கில் அடி வாங்கியது. 

தாமரை, பிரியங்கா சண்டை அவ்வப்போது கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டும். அமீர் என்ட்ரிக்கு பிறகு கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் அதுவும் கொஞ்ச நாளில் அடங்கிவிட்டது. எனவே கடந்த 4 சீசனை விடவும் இந்த சீசன் போர் என்று புலம்புகிறார்கள்  பிக் பாஸ் ரசிகர்கள். 

இன்றைய எபிசோட்டின் சிபி  12  லட்சம் பணத்துடன் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய சீசனில் யார் யார் என்ன காரணத்துக்காக பணத்துடன் வெளியேறினார்கள்? 

பிக் பாஸ் சீசன் 3 - கவின் 

பிக் பாஸ் சீசன் 3-இல் கலந்து கொள்ள கவினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கவினுக்கு அப்போது ஆர்வம் இல்லை. அதன் பிறகு கவினின் குடும்பம் கடன் தொல்லையில் சிக்கி, போலீஸ் ஸ்டேஷன் வரை பிரச்சனை சென்றது, எனவே பிக் பாஸ் 4 வாய்ப்பு வந்தபோது ஆர்வம் இல்லையென்றாலும் ஒப்பு கொண்டு போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் பிக் பாஸ் வீட்டினுள் விளையாட்டுத்தனமான லாஸ்லியாவுடன் காதல், நட்பு என பழக பெரும் சர்ச்சை வெடித்தது.  அந்த சீசனில் அதிகமாக நாமினேஷன் லிஸ்டில் வந்தவர் கவின்தான்.  அவருக்கு ஃபேன் பேஸ் அதிகம் என்பதால் ஒவ்வொரு முறையும் காப்பாற்றப்பட்டார்.

kavin
கவின்


பணத்துடன் ஒருவர் வெளியேறலாம் என்ற அறிவிப்பு வந்தபோது, கவின் சற்றும் யோசிக்காமல் 5 லட்சத்துடன் வெளியேறினார். லாஸ்லியா மற்றும் சாண்டி கவினை அழுது கொண்டே வழியனுப்பி வைத்தனர். கவின் வெளியேற முக்கியமான காரணமாக இருந்தது அவரின் குற்ற உணர்ச்சி தான். குடும்ப சூழல் ஒருபுறம் இருந்தாலும், லாஸ்லியாவுக்கு கெட்ட பேர் வாங்கி கொடுத்து விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி தான் அந்த முடிவெடுக்க வைத்தது. டைட்டில் ஜெயிக்காமல் பாதியில் வெளியேறினாலும், கவினுக்கு திரைத்துறையில் நிறைய வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன, கவினின் ஆல்பம் பாடல் அஸ்கு மாரோ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இதையும் படிங்க ..  ஒரு வழியா செம்பருத்தி சீரியலில் அது நடந்துடுச்சு! 

பிக் பாஸ் சீசன் 4 - கேப்ரில்லா

பிக் பாஸ் 4ல் எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் சேஃப் கேம் ஆடியவர் கேப்ரில்லா. தனக்கு வெளியே பெரியளவில் ரசிகர்கள் இல்லை என்பதை உணர்ந்த கேபி, ஃபைனலுக்கு வந்தாலும் தான் ஜெயிக்கும் வாய்ப்பு குறைவு என்பதை கனித்தார். இதனால் 5 லட்சம் பணத்துடன் வெளியேறினார். பெரிதாக எமோஷனல் குட் பை எல்லாம் சொல்லாமல் கேஷுவலாக வெளியேறினார் கேபி. இது ஒரு ஸ்மார்ட் மூவ் என்று அனைவரும் கேபியை பாராட்டினர். தற்போது கேபி விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே-2 சீரியலில் நாயகியாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

sarath kumar
பிக் பாஸ் தமிழ் 5


பிக் பாஸ் சீசன் 5 - சிபி

பணப்பெட்டி டாஸ்கில், இந்த சீசனின் கடந்த இரண்டு சீசன்களை விட அதிகமாக பணம் வைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு சீசன்களில் 5 லட்சம் வரை வைத்தனர், தற்போது 12 லட்சம் ரூபாய் வைக்கப்பட்டுள்ளது. அமீர் தான் பணத்தை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிபி பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக ஊர்ஜிதமான தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சீசனில் கேபியின் அதே பார்முலாவை தான் சிபி பின்பற்றி இருக்கிறார். அமீர் ஃபைனலிஸ்ட் ஆகிவிட்டார். மற்றவர்கள் அளவுக்கு சிபி பிரச்சனையில் ஈடுபடவில்லை. ரசிகர்கள் குறைவு. எனவே தான் ஜெயிக்கும் வாய்ப்பு குறைவு என்பதால், வந்தவரை லாபம் என்று சிபி பணத்துடன் கிளம்பி விட்டார் போலும்!உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Aswini S
First published:

Tags: Bigg boss 2, Bigg Boss Finalist, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 3, Bigg Boss Tamil 4, Bigg Boss Tamil 5, Kamal Haasan, Kamalhaasan

அடுத்த செய்தி