தர்ஷனுக்கு வராத எமோஷன் லாஸ்லியாவிற்கு மட்டும் ஏன்? கவினிடம் கேள்வி கேட்ட கமல்

கவின் நீங்கள் டாஸ்க்கை டாஸ்க்காகத்தான் பார்க்கிறீர்களா கவினை கேள்வி கேட்ட கமல்

தர்ஷனுக்கு வராத எமோஷன் லாஸ்லியாவிற்கு மட்டும் ஏன்? கவினிடம் கேள்வி கேட்ட கமல்
பிக்பாஸ்
  • News18
  • Last Updated: September 21, 2019, 5:13 PM IST
  • Share this:
90வது நாளான இன்று கமல், கவினிடம் தர்ஷன் கையில் அடிபட்டபோது வராத பதற்றம் லாஸ்லியாவை சாண்டி இடித்து விழுந்த போதுமட்டும் ஏன் வந்தது என கேள்வி கேட்பது போன்ற வீடியோவை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது.16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்த ஆறு பேரில் யார் இறுதி கட்ட டைட்டிலை ஜெயிக்கப் போகிறார்கள் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதற்கு விடை கொடுக்கும் விதமாக ஒரு நபருக்கு மட்டும் இறுதி போட்டிக்குச் நேரடியாகச் செல்லும் கோல்டன் டிக்கெட் யாருக்கு கொடுக்கப் போகிறார்கள் என்பதை கமல் இன்று அறிவிக்கவுள்ளார்.


அதோடு கடந்த வாரம் வீட்டில் இறுதி சுற்றுக்குச் செல்லும் கடுமையான போட்டிகள் நடைபெற்றன. இதனால் வீட்டில் இருப்போர் வெற்றியை நோக்கிய முணைப்பில் இருப்பதால் மோதல்களும் கடுமையாக இருந்தன.

அதில் கவின் , லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகியோரிடையே கடுமையான வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. இந்த சம்பவங்களை வைத்தே இன்றைய நாள் இருக்கும் என கமலின் பேச்சால் யூகிக்க முடிகிறது. நிகழ்ச்சிக் குழு வெளியிட்ட இரண்டாவது புரோமோவில் கமல் கவினிடம் சரமாரியான கேள்விகளை முன் வைக்கிறார். கடந்த வாரங்கள் லாஸ்லியாவிற்காக சாண்டியிடம் கோபட்ட கவினின் செயல்கள்தான் ஹைலைட்டாகப் பேசப்பட்டது. அதை வைத்தே கமலும் சில கேள்விகளை கவினிடம் முன்வைக்கிறார்.

அதில் “ கவின் நீங்கள் டாஸ்க்கை டாஸ்க்காகத்தான் பார்க்கிறீர்களா என்றும் தர்ஷனிற்கு கையில் அடிபட்டு ரத்தம் வந்தபோது ஏன் உங்களுக்கு பதற்றம் வரவில்லை” என்று கேள்வி எழுப்புவதும் நிகழ்ச்சியின் ஸ்வாரஸ்யத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு கவினுடைய பதில்கள் என்னவாக இருக்கும் என்பதே அனைவருடைய இன்றைய நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பாக இருக்கும்.வீடியோவைப் பார்க்க இதோ..

First published: September 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்