Home /News /entertainment /

அப்பா என கெஞ்சும் லட்சுமி.. ஹீரோ பாரதி வில்லனாகி விட்டார்!

அப்பா என கெஞ்சும் லட்சுமி.. ஹீரோ பாரதி வில்லனாகி விட்டார்!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

வெண்பா - ரோகித் கல்யாணத்துடன் சீரியல் ஒரு முடிவுக்கு வந்து விடும் என ரசிகர்கள் நினைக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோடில் டாக்டர் பாரதியிடம் அப்பா அப்பா என கெஞ்சுகிறார் லட்சுமி. ஆனாலும் பாரதி மனம் இறங்கவில்லை. அதற்கு பதிலாக கண்ணம்மாவிடம் பொங்கி வெடிக்கிறார்.

    பாரதி கண்ணம்மா சீரியல் முடிய போகிறது என ஒரு பக்கம் எற்கெனவே ஏகப்பட்ட தகவல்கள் பரவி வர,  கதையின் போக்கும்  பயங்கர ஸ்பீடாக உள்ளது. இவ்வளவு நாளாக ஜவ்வு போல் கதை சென்றது ஆனால் தீடீரென்று எல்லா உண்மையும் தெரிய வருவது போல் சீரியல் கதை சென்றுக் கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடில் பாரதிக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது. அதற்கு காரணம் லட்சுமி. தற்செயலாக பாரதி வீட்டுக்கு ஃபோன் செய்ய அந்த ஃபோனை எடுத்து பேசுகிறார் லட்சுமி. பாசத்தில் லட்சுமி அப்பா அப்பா என பாரதியிடம் கெஞ்சுகிறார்.

    சேர போகிறார்களா பாக்கியா - கோபி? இணையத்தில் பரவிய ஃபோட்டோவால் வந்த குழப்பம்!

    நடந்த பிரச்சனை எல்லாவற்றையும் மறந்து விடுங்கள் என்கிறார். ஆனால் பாரதி அதற்கு ரியாக்ட் செய்யவில்லை. ஃபோனை கோபத்தில் வைத்து விட்டு கண்ணம்மாவை கூப்பிடுகிறார். லட்சுமி என்னை அப்பா அப்பா என கூப்பிடுகிறாள் என்று கூறி கத்துகிறார். கண்ணம்மாவுக்கு காரணம் புரியவில்லை. ஆனால் லட்சுமி அப்பா என கூப்பிடுவது பாரதிக்கு பிடிக்கவில்லை என்று மட்டும் தெரிகிறது. உடனே கண்ணம்மாவும் எதிர்த்து பேச தொடங்குகிறது.

    சன் டிவியில் மீண்டும் பூவரசி.. ரசிகர்கள் செம்ம ஹேப்பி!

    இனிமேல் லட்சுமி அப்பா என்று தான் அழைப்பாள் என செக் வைக்கிறார். பாரதிக்கு இன்னும் கோபம் தலைக்கு ஏறுகிறது. மாறி மாறி இருவரும் சண்டை போட்டு கொள்கிறார்கள். இந்த பக்கம் வெண்பா நிச்சயதார்த்த வேலைகள் பயங்கர விறுவிறுப்பாக நடக்கிறது. மேடையில் என்ன நடக்க போகிறது என்பது ஏற்கெனவே புரமோ மூலம் தெரிந்து விட்டது. ஆனாலும் வெண்பா - ரோகித் கல்யாணத்துடன் சீரியல் ஒரு முடிவுக்கு வந்து விடும் என ரசிகர்கள் நினைக்கின்றனர். பொறுந்திருந்து பார்ப்போம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி